ஆப்நகரம்

தேவாலயம் தீப்பிடித்து 41 பேர் பலி; உலகை உலுக்கும் சோகம்!

தேவாலயம் தீப்பிடித்ததில் ஒரே நேரத்தில் 41 பேர் பலியாகினர். மேலும் உயிர்பலி அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுவதால் உலக மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

Samayam Tamil 14 Aug 2022, 7:32 pm
எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில், காப்டிக் தேவாலயம் அமைந்துள்ளது. அப்பகுதியில் புகழ் பெற்ற தேவாலயங்களில், இதுவும் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடந்து கொண்டிருந்தது.
Samayam Tamil தீப்பிடித்து எரியும் தேவாலயம்


இந்த வழிபாட்டில் நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில் தேவாலயத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதனால் கரும்புகை அதிகமாக வெளியேறியதால் பொதுமக்களால் உடனடியாக தப்பிக்க முடியவில்லை.

இதன் காரணமாக அடுத்தடுத்து 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் 14 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதனால் உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இது தொடர்பான முதல் கட்ட விசாரணையில் மின்சார கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

அதிரடியில் இறங்கும் முதல்வர்; அண்ணாமலை திக்.. திக்.. திக்!
இதனை தொடர்ந்து, 15க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தீயானது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பிறகே மொத்த பலி எண்ணிக்கை குறித்து தெரிய வரும் என கூறப்படுகிறது.

இதுகுறித்து எகிப்து சுகாதார துறை கூறுகையில், ‘ மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கருகிறோம். தேவாலயத்தில் மக்கள் அதிக அளவில் இருந்ததால் வெளியேறுவதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

கை கழுவிய அண்ணாமலை; பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி!
இதன் காரணமாகவே உயிர்பலி அதிகரித்துவிட்டது. உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான பணிகளை தீயணைப்புத்துறையினர் தீவிரமாக செய்து வருகின்றனர்’ என்றனர்.

அடுத்த செய்தி