ஆப்நகரம்

மகனுக்காக வாடகைத்தாயாகிய தாய்!

மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை இல்லாததால், அவரின் குழந்தைக்கு வாடகைத் தாயாக அவரது தாய் முன்வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

Samayam Tamil 22 Mar 2018, 10:28 pm
மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை இல்லாததால், அவரின் குழந்தைக்கு வாடகைத் தாயாக அவரது தாய் முன்வந்துள்ள சம்பவம் நடந்துள்ளது.
Samayam Tamil surrogate-mother-in-law-kayla-jones-fb-720x450


அர்கான்சஸ் மாகாணத்தில் வசிப்பவர் கெய்லா ஜோன்ஸ். இவருக்கு வயது 29. அவருக்கும் அவரது கணவருக்கும் குழந்தை இல்லை. கெய்லாவுக்கு 17 வயது இருக்கும்போதே, ஏதோ ஒரு நோயால் மிக மோசமாக பாதிக்கப்பட்டார். அந்தச் சூழ்நிலையில் அவருடைய கர்ப்பபையில் (Uterus) பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

`இனி அவரால் குழந்தையை வயிற்றில் சுமக்க முடியாது’ என்பதையும் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். ஆனால், கெய்லாவின் கருமுட்டைப்பை (Ovary) நீக்கப்படவில்லை. அதனால் அவரின் கருமுட்டையை (Ovum) எடுத்து, குழந்தையைப் பெற அவருக்கு ஒரு வாய்ப்பு இருந்தது. எனவே, ஒரு வாடகைத்தாயை அமர்த்திக்கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள ஜோன்ஸ் தம்பதி முடிவெடுத்தார்கள்.
ஆனால், பொருத்தமான, நம்பிக்கையான வாடகைத்தாய் யாரும் கிடைக்கவில்லை. வீட்டுக்கு அருகிலேயே ஒரு வாடகைத்தாய் கிடைத்தால், அவர்களின் நேரடிப் பார்வையில் வாடகைத்தாயை பிரசவம் வரை பார்த்துக்கொள்ளலாம் என்பது அவர்களின் எண்ணம்.

மகனும் மருமகளும் குழந்தைக்காகப் படும் அவஸ்தைகளை நேரடியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்பேட்டி. பேட்டியால் அவரது மகன்படும் கஷ்டத்தைபார்க்க முடியவில்லை.

அதனால் தானே வாடகை தாயாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் குழந்தையை சுமக்க முதலில் அவரது குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை .ஆனால் இறுதியில் ஏற்றுக்கொண்டனர். தற்பொது பேட்டி தனது பேத்தியை வற்றில் சுமந்து வருகிறார்.

அடுத்த செய்தி