ஆப்நகரம்

இஸ்ரேல் ராணுவத்துடன் பாலஸ்தீனியர்கள் நடத்திய மோதலில் 7 பேர் பலி !

இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் ஏற்பட்ட மோதலில் 7 பேர் பலியாகி உள்ளனர்.

Samayam Tamil 29 Sep 2018, 12:23 pm
இஸ்ரேல் 1948 ஆம் ஆண்டுஉருவானது. அப்போதுநடந்த மோதல்களில் பல்லாயிரக் கணக்கானபாலஸ்தினியர்கள்வெளியேற்றப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக சென்றனர். அப்போது இடம் பெயர்ந்த சுமார் 7 லட்சம் பேர் திரும்பி வர அனுமதிக்கப்பட வேண்டும் என்பது பாலஸ்தீனியர்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.
Samayam Tamil 11


இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், இஸ்ரேல் படையினரின் அத்துமீறல்களை எதிர்த்தும்அவ்வப்போது பாலஸ்தீனியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த வகையில், பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் ,காசா எல்லையில் பெரிய அளவில் ஒரு போராட்டம் நடந்தது. இஸ்ரேலுக்கு எதிரான இந்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது வன்முறை மூண்டது, இஸ்ரேல் படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர்.இந்த மோதலில், 7 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.

500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர், காயம் அடைந்தவர்களில் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறைக்குபாலஸ்தீன போராட்டக்காரர்களே காரணம் என்றுஇஸ்ரேல் ராணுவம் குற்றம் சாடியுள்ளனர்.

அடுத்த செய்தி