ஆப்நகரம்

வேலை தேடிச் செல்லும் மியான்மர் மக்கள்; தாய்லாந்தில் தான் பெரிய ஆக்கிரமிப்பு...!

நடப்பாண்டில் மட்டும் தாய்லாந்திற்கு வேலை தேடிச் சென்ற மியான்மர் நாட்டவரின் எண்ணிக்கை 75,000ஐத் தாண்டியுள்ளது.

TNN 13 Aug 2017, 2:36 pm
பாங்காக்: நடப்பாண்டில் மட்டும் தாய்லாந்திற்கு வேலை தேடிச் சென்ற மியான்மர் நாட்டவரின் எண்ணிக்கை 75,000ஐத் தாண்டியுள்ளது.
Samayam Tamil 75000 migrants head to thailand this year
வேலை தேடிச் செல்லும் மியான்மர் மக்கள்; தாய்லாந்தில் தான் பெரிய ஆக்கிரமிப்பு...!


நடப்பாண்டின் ஜனவரி முதல் ஜூலை வரை மியான்மரிலிருந்து வெளிநாடுகளுக்கு 84,425 பேர் வேலைக்காக சென்றுள்ளனர். அவர்களில் தாய்லாந்துக்கு மட்டும் 75,048 பேர் சென்றுள்ளதாக மியான்மர் தொழிலாளர் மற்றும் குடிவரவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட 10,000 தொழிலாளர்கள் மியான்மரிலிருந்து தாய்லாந்துக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தாய்லாந்தில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களை முறைப்படுத்தும் சட்டத்தை, கடந்த ஜூன் 23ஆம் தேதி தாய்லாந்து நடைமுறைக்கு கொண்டு வந்தது.

இதையடுத்து மியான்மர், லாவோஸ், கம்போடியாவைச் சேர்ந்த 1,83,000 தொழிலாளர்கள் முறையான ஆவணங்களுக்காக பதிவுச் செய்திருந்தனர். அதே சமயம் கைது நடவடிக்கைக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தாய்லாந்தை விட்டு வெளியேறி இருந்தனர்.

75,000 migrants head to Thailand this year.

அடுத்த செய்தி