ஆப்நகரம்

எகிப்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போலீசார் உள்பட 9 பேர் பலி

எகிப்து நாட்டில், ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், 8 போலீசார் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.

TNN 10 Jan 2017, 2:00 am
எகிப்து நாட்டில், ஐஎஸ் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில், 8 போலீசார் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர்.
Samayam Tamil 8 policemen 1 civilian killed in terror attacks in egypt
எகிப்தில் ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல்: போலீசார் உள்பட 9 பேர் பலி


அந்நாட்டின் வடக்கே சினாயில் உள்ள அல் அரிஷ் பகுதியில் இந்த தீவிரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. அங்குள்ள போலீஸ் சாதனைச்சாவடியை முற்றுகையிட்ட ஐஎஸ் தீவிரவாதிகள், 20 பேர், சக்திவாய்ந்த துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை ஏந்தி தாக்குதல் நடத்தினர்.

இந்த திடீர் தாக்குதலில், 8 போலீசார் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தாக்குதல் நடத்தியபின், அங்கிருந்து ஐஎஸ் தீவிரவாதிகள் தப்பிச் சென்றுவிட்டதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, 3 நாட்கள் முன்பாக, இத்தகைய தாக்குதலை ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்தி, 13 போலீசாரை கொன்றது குறிப்பிடத்தக்கது.

Heavily-armed militants linked to ISIS today targeted two police checkpoints using an explosive-laden garbage truck and RPGs, killing eight policemen and one civilian, the latest attack in Egypt's restive North Sinai.

அடுத்த செய்தி