ஆப்நகரம்

ஜப்பானில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கார் மோதி விபத்து:9 பேர் காயம்!

ஜப்பானில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கார் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Samayam Tamil 1 Jan 2019, 12:11 pm
ஜப்பானில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கார் மோதிய விபத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
Samayam Tamil Tokyo


ஜப்பானில் டோக்கியோ நகரிலுள்ள ஹராஜூகு பகுதியில் டகேஷிட்டா என்ற தெருவில் மக்கள் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வந்தனர். இதனை முன்னிட்டு கார் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தான் நள்ளிரவின் போது கொலை செய்யும் நோக்கத்துடன் வாலிபர் கார் ஒன்றில் வந்து மோதியுள்ளார்.

இந்த விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 9 பேர் காயமடைந்துள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கார் விபத்து ஏற்படுத்திய வாலிபர் கஜூஹிரோ குசாகாபே என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி