ஆப்நகரம்

900 ஆண்டுகள் பழமையான தங்கப் புதையல் கண்டுபிடிப்பு

இஸ்ரேலில் 900 ஆண்டுகளுக்கு பழைமையான தங்க நாணயங்கள், ஆபரணங்கள் கொண்ட புதையலை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

Samayam Tamil 4 Dec 2018, 7:56 pm
இஸ்ரேலின் சீசெரா நகரில் உள்ள ஒரு வீட்டில் அந்நாட்டு அகழ்வாராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் இந்த தங்கப் புதையல் கிடைத்துள்ளது. கிறிஸ்துவ பைஜென்டைன் சாம்ராஜ்யம் மற்றும் முஸ்லிம் பேட்மிட் காலிபேட் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களால் இது புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
Samayam Tamil 440790074


இரண்டு கற்களுக்கு இடையே மறைந்திருந்த இந்த புதையல் வெண்கல பாத்திரம் ஒன்றில் உள்ளது. 24 தங்க நாணயங்கள் மற்றும் ஒரு காதணியும் உள்ளன.
பைஜென்டைன் சாம்ராஜ்ய அரசர்கள் மூன்றாம் ரொமானோஸ், ஏழாம் மிக்கேல் டக்ளஸ் ஆகியோர் உருவங்களும் பொறித்த நாணயங்கள் அந்தப் புதையலில் இருக்கின்றன.

அடுத்த செய்தி