ஆப்நகரம்

அஜித், விஜய் பட டிரைலரை விட அதிகம் பார்க்கப்படும் 6 வயது சிறுவனின் வீடியோ!

ஒவ்வொரு முறையும் முன்னனி நடிகர்களான அஜித், விஜய் படங்கள் வெளியாவதற்கு முன் அந்த படங்களின் டிரைலர் எவ்வளவு முறை பார்க்கப்பட்டது, யார் படம் அதிகளவில் பார்க்கப்பட்டது என ரசிகர்கள் போட்டி போடுவதுண்டு.

TOI Contributor 30 Dec 2017, 6:35 pm
ஒவ்வொரு முறையும் முன்னனி நடிகர்களான அஜித், விஜய் படங்கள் வெளியாவதற்கு முன் அந்த படங்களின் டிரைலர் எவ்வளவு முறை பார்க்கப்பட்டது, யார் படம் அதிகளவில் பார்க்கப்பட்டது என ரசிகர்கள் போட்டி போடுவதுண்டு.
Samayam Tamil a 6 year old boy is making 11 million a year on youtube reviewing toys
அஜித், விஜய் பட டிரைலரை விட அதிகம் பார்க்கப்படும் 6 வயது சிறுவனின் வீடியோ!


நடிகர்களின் படங்கள் ஏதோ ஒரு நாள் அதிகமாக பார்க்கப்படும் நிகழ்வாக உள்ளது. யூ டியூப் மூலம் இப்படி பார்க்கப்படும் வீடியோவுக்கு அதன் நடுவே வரும் விளம்பரங்களால் கிடைக்கும் வருவாயில், அதை பதிவேற்றியவர்களுக்கு யூ டியூப் மூலம் பங்கு தொகை அளிக்கப்படும்.

அந்த வகையில் முன்னனி நடிகர்களின் டிரைலர் போட்டி போட்டு பார்ப்பதால் அதை பதிவேற்றிய பட தயாரிப்பு நிறுவனத்துக்கு நல்ல வசூல் தான்.

ஆனால் அப்படி முன்னனி நடிகர்களின் படத்தின் டிரைலரை விட அதிகளவில் ஒரு சிறுவனின் ஒவ்வொரு வீடியோவும் பார்க்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், அமெரிக்காவின் ரியான் எனும் குழந்தை தனது 3 வயது முதல் விளையாட்டு பொருட்களை வைத்து விளையாடுவதை அவர்களின் பெற்றோர் வீடியோ எடுத்து யூ டியூபில் பதிவேற்றி வருகின்றனர்.

சிறுவன் ரியானின் மழலை குரலில் அவன் செய்யும் சேஷ்டைகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைக்கும். இப்படி அவரின் ரியான் டாய்ஸ் ரிவீவ் எனும் யூ டியூப் சேனலுக்கு 10 மில்லியன் (ஒரு கோடி) பாலோவர்கள் உள்ளனர்.

இவர் போடும் ஒவ்வொரு வீடியோவும் குறைந்த பட்சம் 10 லட்சம் பேராவது பார்க்கின்றனர். அதிகபட்சமாக, விவேகம், மெர்சல் டிரைலர் பார்த்த பார்வை அளவுக்கு உள்ளது.



ஒரு மாதத்தில் மட்டும் இந்த சிறுவனின் சேனலுக்கு 70 கோடி வருவாயாக யூ டியூப் நிறுவனம் அளித்துள்ளது.

அடுத்த செய்தி