ஆப்நகரம்

உடனடி கர்மா..! இறந்ததை போல நடித்து வேட்டையாளரை கொன்ற மான்..

தெற்கு அமெரிக்காவில் மானை வேட்டையாட சென்றவர், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் இறந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

Samayam Tamil 25 Oct 2019, 3:45 pm
உலகில் அதிகமாக வேட்டையாடப்பட்டு அழிந்து வரும் விலங்குகளில் மானும் ஒன்று. தமிழகத்தில் இதற்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. இதில் மானை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் வரை அதிகபட்ச தண்டனை அமலில் உள்ளது.
Samayam Tamil உடனடி கர்மா..! இறந்ததை போல நடித்து வேட்டையாளரை கொன்ற மான்...


தெற்கு அமெரிக்காவின் அர்கான்சஸ் நகரை சேர்ந்தவர் வெஸ்லி (66). இவர் பயிற்சி பெற்ற வேட்டையாளராவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு மான் வேட்டைக்காக மிஸிஸிப்பி ஆற்றின் கரைக்கு சென்றுள்ளார்.

இந்த நாட்டுக்கு செல்ல இனி இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!!

அப்போது கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு மான் ஒன்றை குறி பார்த்து சுட்டிருக்கிறார். இதனால் அந்த மான் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளது. மானை வேட்டையாடி மகிழ்ச்சியில் அதன் அருகில் நெருங்கிய வெஸ்லியை, திடீரென பாய்ந்த மான், கொம்புகளை கொண்டு தாக்கியுள்ளது.

துப்பாக்கியை குண்டு துளைத்த நிலையில் உயிர் பிழைத்தால் போதும் என தப்பி ஓடாமல், தன்னை வேட்டையாட வந்தவரை சாகும் வரைக்கும் விடக்கூடாது என நினைத்த அந்த மான், வெஸ்லியை சரமாரியாக தாக்கிவிட்டு, நுனியளவு உயிருடன் விட்டு சென்றுள்ளது.

தானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ!!

இந்த நிலையில், வெஸ்லி தான் வைத்திருந்த செல்போன் மூலம் எப்படியோ தனது மனைவிக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன் பிறகு அங்கு வந்தடைந்த அவரது மருமகன், வெஸ்லியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் போகும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.

பிரேத பரிசோதனை இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், வெஸ்லி மான் கொம்புகளால் தாக்கப்பட்ட தடயங்கள் அதிகமாக உள்ளன. அவரது இறப்பு குறித்து பதிவு செய்கையில், மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஆஸ்திரேலிய மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஆட்டின் மரணம்!!

மான்களை குறித்த ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில், பெரும்பாலானோர் மான்களை வேட்டையாடியதும், அது இறந்து விட்டதாக நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் மான்கள் சுயநினைவை இழந்த பின்பும், மீண்டும் எழுந்து ஓடக்கூடியவை. ஆகையால் வேட்டையாடுபவர்கள் இதில் கவனமாக இருக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.

அடுத்த செய்தி