ஆப்நகரம்

சத்துமாவு கணக்காய் பவுடர் சாப்பிடும் வினோத பெண்!!

முகத்துக்கு பூசும் பவுடரை சத்துமாவு கணக்காய் பெண் ஒருவர் ஆண்டுக்கணக்கில் சாப்பிட்டு வருவது இங்கிலாந்து நாட்டில் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 9 Jan 2020, 4:58 pm
இங்கிலாந்தின் டெவோன் நகரை சேர்ந்தவர் லிசா ஆண்டர்சன். 44 வயதான இவர் ஐந்து பிள்ளைகளுக்கு தாயும் கூட.
Samayam Tamil சத்துமாவு கணக்காய் பவுடர் சாப்பிடும் வினோத பெண்


இந்த நிலையில் லிசா ஒரு வினோத பழக்கத்துக்கு ஆளாகியுள்ளார். இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக முகத்துக்கு பூசிக் கொள்ளும் பவுடரை, ஏதோ சத்துமாவை சாப்பிவதை போல டப்பா டப்பாவாக தின்று தீர்த்து வருகிறார்.

இதற்காக அவர் இதுவரை சுமார் 7.5 லட்சம் ரூபாய் ( 8,000 பவுண்டு) செலவு செய்துள்ளார். லிசா ஆண்டர்சனுக்கு கடைசி குழந்தை பிறந்த பிறகே இந்த வினோத பழக்கம் ஏற்பட்டுள்ளது.

சிக்கனமா இருக்காங்களாம்... ட்ராலி பேக்குக்குள் சிறுவனை கொண்டு சென்ற தம்பதி..!

இந்தப் பழக்கம் ஏற்பட்டதிலிருந்து குடும்ப உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் குளியலறைக்கு சென்று ரகசியமாகவே பவுடரை அவர் சாப்பிட்டு வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இந்த விஷயம் தெரிய வந்தபோது லிசாவின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

குடிப்பழக்கத்துக்கு அடிமையானது போல் பவுடருக்கு அடிமையாகியுள்ள அவரை, இதிலிருந்து எப்படி மீட்பது எனத் தெரியாமல் அவரின் குடும்ப உறுப்பினர்கள் விழி பிதுங்கி நிற்கின்றனர்.

ரஷ்யாவில் மது பாட்டிலை உடைத்து சரக்கடிக்கும் பன்றிகள்

மருத்துவர்களின் உதவியை நாடியபோது இரும்புச் சத்து குறைபாடு அல்லது வேறு சில நோய்களின் அறிகுறியால் லிசாவுக்கு இந்த வினோத பழக்கம் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி