ஆப்நகரம்

தோசையை நியூ யார்க்கின் ஆதர்ச உணவாக்கிய தமிழர்!

தென்னிந்திய உணவுகள் அனைத்தும் தற்போது உலகின் பல மூலைகளில் விற்பனையாகி வருகிறது. அதில் தோசை மற்றும் இட்லிக்கு முக்கிய இடம் உண்டு. ​நியூயார்க் நகரத்தின் வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கில் தோசை கடை வைத்து நடத்தி வருகிறார் இலங்கைத் தமிழரான திரு குமார்.

Samayam Tamil 25 Jun 2019, 12:54 pm
தென்னிந்திய உணவுகள் அனைத்தும் தற்போது உலகின் பல மூலைகளில் விற்பனையாகி வருகிறது. அதில் தோசை மற்றும் இட்லிக்கு முக்கிய இடம் உண்டு.
Samayam Tamil 250px-Dosa-chutney-sambhar

தோசை என்பது உளுந்து மற்றும் அரிசி கொண்டு தயாரிக்கப்படும் தட்டையான வட்டவடிவான உணவுப்பதார்த்தம் ஆகும். தென் இந்தியா மற்றும் இலங்கைத் தமிழர்களிடையே பல பகுதிகளில் மிகவும் புகழ்பெற்ற உணவு. இது பொதுவாகத் தட்டையான தாள் போன்ற வட்ட வடிவம் கொண்டதெனினும் ஒரு சில விடுதிகளில் தட்டையான வடிவில் நெய்த்தோசையைச் சுட்டுவிட்டுப் பின்னர் கூம்பி வடிவிலும் பரிமாறுவர். மஞ்சள் சேர்க்கப்படாத தோசை பொதுவாக வெண்மையான நிறத்தில் இருக்கும். வெந்தயம் - தோசை மாவில் வெந்தயம் சிறிது அளவு சேர்த்து அரைக்கப்படும் அதனால் தோசைக்கு சற்று சிவந்த நிறம் ஏற்படும். இது சேர்ப்பதால் உடலுக்கும் நல்லது குளிர்ச்சியை தரும் .

இதில் பல வெரைட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்ட போதிலும் இதனை சாப்பிடாதவர்கள் இல்லை எனலாம். குறிப்பாக தோசைக்கு ரசிகர் பட்டாளம் கூடிக்கொண்டே செல்கிறது. இலங்கைத் தமிழர் ஒருவர் தோசையை நியூ யார்க் நகரில் பிரபலமான உணவாக்கி தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

நியூயார்க் நகரத்தின் வாஷிங்டன் ஸ்கொயர் பார்க்கில் தோசை கடை வைத்து நடத்தி வருகிறார் இலங்கைத் தமிழரான திரு குமார். கார்மெண்ட், இரும்புத் தொழிற்சாலை என துவக்கத்தில் பல வேலைகள் செய்துவந்தாலும் தற்போது தோசை கடை மூலம் தனக்கென அங்கு தனி வாடிக்கையாளர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார் திரு குமார். முருக பக்தரான இவர் மனைவி மற்றும் மகளுடன் அமெரிக்காவில் குடியேற விசாவுக்காக பல சிரமங்கள் பட்டுள்ளார்.

வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் கிடையாது. ஆகவே மகிழ்ச்சியாக இருக்க வேண்டியது அவசியம் என்கிறார் திரு. ’தோசாமேன்’ என அப்பகுதியில் அனைவராலும் அறியப்படும் திரு 30 வகையான தோசைகளை வார்த்து வருகிறார். இதில் இவர் செய்யும் சமோசா தோசைக்கு மவுஸ் அதிகம்.

அப்பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள்முதல் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள்வரை அனைவரும் இவரது கடைக்கு வாடிக்கையாளர்கள். நியூ யார்க்கில் இருந்து வெகுதொலைவில் இருப்பவர்கள் கூட இவரது தோசைக்காக பல மைல் கடந்து வந்து இங்கு சாப்பிட்டுச் செல்கின்றனர்.

எந்த வித அலட்டலும் இல்லாமல் இயல்பாகப் பேசும் தோசா மேன் திருவின் மகள் இரு முதுகலை பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. பைக் ரேஸிங்கில் அதீத ஆர்வம் கொண்ட திரு பல ரேஸ் பைக்குகளை வாங்கி அவற்றை ஓட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்.

அடுத்த செய்தி