ஆப்நகரம்

மூன்று பிஞ்சுகளை காப்பாற்றிய செவிலியர்: வைரலாகும் லெபனான் புகைப்படம்!

லெபனான் தலைநகர் பெய்ரூட் வெடிவிபத்தில் செவிலியர் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

Samayam Tamil 6 Aug 2020, 7:16 am
லெபனான் தலைநகர் பெய்ரூட் நகரின் துறைமுக சேமிப்புக் கிடங்கில் 2750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்து அந்நாட்டையே உலுக்கும் வகையில் பெரும் விபத்து ஏற்பட்டது. நேற்று முன் தினம் மாலை நடைபெற்ற இந்த பெரு வெடிப்பு சம்பவத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரை உயிரிழந்துள்ளதாகவும், 5000க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
Samayam Tamil lebanon nurse


வீடுகள், மருத்துவமனைகள், தேவாலயங்கள் என பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பல கட்டிடங்கள் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. அந்தப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள், சாலைகளில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் முழுவதுமாக சேதமடைந்தன. நகரின் பாதியளவு முற்றிலும் சேதமடைந்துள்ளது.

பாதிப்பு, பலி விவரங்கள் குறித்து செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் போது சேதமடைந்த மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஒருவர் மூன்று பச்சிளம் குழந்தைகளை கைகளில் பிடித்தபடி செல்போனில் பேசும் புகைப்படம் வைரலாகிவருகிறது.

வெள்ளநீரில் அருகருகே தத்தளித்த ரயில்கள்; பீதியில் பயணிகள் - மும்பையில் பரபரப்பு!

பெரு விடிப்பு நிகழ்வால் ஏற்பட்ட பாதிப்புகளை பிலால் ஜாவிச் என்ற புகைப்படக் கலைஞர் படம் பிடித்துக் கொண்டிருந்தபோது, மிகவும் சேதமடைந்த குறிப்பிட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு நோயாளிகள், செவிலியர்கள் என 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து புகைப்படக் கலைஞர் ஜாவிச், “புதிதாகப் பிறந்த மூன்று குழந்தைகளை செவிலியர் வைத்திருப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். செவிலியரின் அமைதியை நான் கவனித்தேன். ஒரு மீட்டர் தொலைவில் அந்த இடம் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்திருந்தது. இறந்த, காயமடைந்த பலர் அருகிலேயே கிடக்கின்றனர். ஆனால் அந்த பதற்றத்தை வெளிப்படுத்தாமல் செவிலியர் மிக அமைதியான மனநிலையில் மூன்று குழந்தைகளையும் ஒரே கையில் வைத்திருந்தார்.

லெபனானில் உயரும் பலி எண்ணிக்கை, குண்டுவெடிப்புக்கு என்ன காரணம்?

பிலால் ஜாவிச் எடுத்த செவிலியர் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் செவிலியருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

அடுத்த செய்தி