ஆப்நகரம்

தேர்தலில் ஹிட்லர் வெற்றி: என்னய்யா சொல்றிங்க?

உள்ளாட்சி தேர்தலில் ஹிட்லர் வெற்றிபெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Dec 2020, 7:23 pm
ஜெர்மன் நாட்டின் முன்னாள் சர்வாதிகாரியான அடால்ஃப் ஹிட்லர் பல லட்சக்கணக்கானவர்களை கொன்றுகுவித்தவர். அவரது பெயர் சூட்டப்பட்ட நபர் ஒருவர் நமீபியா நாட்டின் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்று உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.
Samayam Tamil Adolf Hitler


தெற்கு ஆப்ரிக்காவில் உள்ள நமீபியா நாட்டில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், அடால்ஃப் ஹிட்லர் என்ற நபரும் வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு வயது 54.

10 கோடி கோவிட்-19 தடுப்பூசி டார்கெட்: ரெடியா மக்களே?

ஆளும் கட்சியான ஸ்வாபோ கட்சியை சேர்ந்த அடால்ஃப் ஹிட்லர் ஓம்புண்ட்ஜா தொகுதியின் கவுன்சிலராக வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு சுமார் 85% வாக்குகள் கிடைத்துள்ளன. உலகத்தையே ஆளுவதற்கு கனவு கண்டவர் ஜெர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர். ஆனால், நமீபியா ஹிட்லருக்கோ உலகத்தை ஆள வேண்டுமென எந்த திட்டமும் இல்லை என்று கூறுகிறார்.



மேலும், நாஜிக்களின் கொள்கைக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஹிட்லர் தெளிவுபடுத்தியுள்ளார். நமீபியா ஒரு காலத்தில் ஜெர்மன் காலனியாக இருந்ததால் அங்கு அடால்ஃப் என்ற பெயர் மிகவும் பிரபலம்.

ஜெர்மன் ஹிட்லரை மனதில் வைத்து தனது தந்தையார் பெயர் சூட்டியதாக கூறுகிறார் நமீபியாவின் ஹிட்லர். ஆனால், ஹிட்லர் என்னென்ன கொடுமைகளை செய்திருக்கிறார் என தனது தந்தைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார் நமீபியாவின் ஹிட்லர்.

குழந்தை பருவத்தில் தனது பெயர் தொடர்பாக எதுவும் குழப்பம் வந்ததில்லை என்று கூறும் அடால்ஃப் ஹிட்லர், வளர்ந்த பிறகுதான் பெயரில் இருக்கும் பிரச்சினைகளை பற்றியும், நிஜ ஹிட்லரை பற்றியும் தெரிந்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி