ஆப்நகரம்

ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு டிரம்ப் பாராட்டு

ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா பயங்கர சக்தி வாய்ந்த குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

TNN 14 Apr 2017, 3:28 am
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா பயங்கர சக்தி வாய்ந்த குண்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Samayam Tamil after very successful attack in afghanistan us president says their report
ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு டிரம்ப் பாராட்டு

அமெரிக்க அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் கொள்கைகளிலும் மாற்றம் வரும் என்று ஏதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று இரவு 7.30 மணிக்கு அதிரடியாக அதிபர் டொனால்டு டிரம்ப் அரசு ஆப்கானிஸ்தான் மீது பயங்கர வெடிகுண்டு தாக்குதலை நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானின் நன்கர்ஹர் என்ற இடத்தில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை குறிவைத்து மதர் ஆப் ஆல் பாம்'' என்ற பெயரில் சுமார் 21,000 பவுன்ட் எடையுள்ள 'MOAB' எனப்படும் சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை அமெரிக்கா வீசியுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில், அமெரிக்க ராணுவத்தை எண்ணி பெருமைப்படுவதாகவும், ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகளுக்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க ராணுவத்தை நினைத்து பெருமைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி