ஆப்நகரம்

காற்று மாசுபாடு கற்றல் திறனை பாதிக்கும்: புதிய ஆய்வில் தகவல்!

காற்று மாசுபாடு மனிதர்களின் மூளையை பாதிப்பதால், கற்றல் திறன் மட்டும் கணக்கு பாடங்களை உள்வாங்கும் திறனில் பாதிப்பு ஏற்படுவது சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 28 Aug 2018, 2:12 pm
காற்று மாசுபாடு மனிதர்களின் மூளையை பாதிப்பதால், கற்றல் திறன் மட்டும் கணக்கு பாடங்களை உள்வாங்கும் திறனில் பாதிப்பு ஏற்படுவது சமீபத்திய ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil Delhi4


சீனாவில் செயல்பட்டு வரும் யேல் மற்றும் பீகிங் பல்கலைகழகம் மற்றும்வாஷிங்டனில் உள்ள சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி கழகம் (International Food Policy Research Institute) இணைந்து காற்று மாசுபாடு தொடர்பாகஆராய்ச்சிகளை மேற்கொண்டனர். இதன் முடிவுகள் ’புரோசிடிங் ஆப் நேஷனல் அகாதமி ஆப் சைன்ஸ் ’ (Proceedings of National Academy of Science) என்றஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டுள்ள முடிவுகள் பின்வருமாறு

’காற்று மாசுபாடு குறித்த இந்த ஆய்வு32, 000 சீனர்களிடம், 2010 முதல் 2014 ஆம் ஆண்டுவரை நடத்தப்பட்டது. குறுகிய காலக்கட்டம் வரை காற்று மாசுப்பாட்டில் இருப்பவர்களிடமும், நீண்டகாலம் வரை காற்று மாசுப்பாட்டில் வாழ்பவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முக்கிய ஆராய்ச்சியாளர் சையோபோ சாங் கூறுகையில்’ காற்று மாசுபாடு மூளையை பாதிப்பதால், கற்றல் திறன் மற்றும் ஆழ்ந்து சிந்தித்து கணக்கு பாடங்களை புரிந்துகொள்ளும் திறன் பாதிக்கப்படுகிறது. இது பெண்களைவிட ஆண்களை அதிகமாக பாதிக்கிறது. அதுவும் வயது முதிர்ந்த ஆண்களுக்கு சொற்களை நினைவுப்படுத்தும் திறனும் பாதிக்கப்படுகிறது.

இந்த ஆராய்ச்சியானது இந்தியாவுக்கு பொருந்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியாவில் மட்டும் 15 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் மரணமடைந்துள்ளனர். அதேபோல் அதே ஆண்டு சீனாவில் 18 லட்சம் மக்கள் காற்று மாசுபாட்டால் மரணமடைந்துள்ளனர். இதனால் மறைமுகமாக பொருளாதார பாதிப்புகள் வரும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் காற்று மாசுபாடு மூளையை பாதிப்பதால் அன்றாடம் எடுக்க வேண்டிய முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாத நிலை ஏற்படும். அத்துடன் மறதிகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி