ஆப்நகரம்

அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா ஓய்வு!

சீனாவில் புகழ்பெற்ற ஆன்லைன் வர்த்தக சேவை நிறுவனமான அலிபாபாவின் தலைவர் ஜாக் மா ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

Samayam Tamil 8 Sep 2018, 2:12 pm
சீனாவில் புகழ்பெற்ற ஆன்லைன் வர்த்தக சேவை நிறுவனமான அலிபாபாவின் தலைவர் ஜாக் மா ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil jack-ma-alibaba


சீனாவில் அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வழியேயான இ வர்த்தக சேவையில் புகழ் பெற்றது. 1999ம்ஆண்டுதொடங்கப்பட்ட இந்த நிறுவனம், நுகர்வோர் ஒருவரிடம் இருந்துமற்றொரு நுகர்வோர், வணிக நிறுவனத்திடம் இருந்துநுகர்வோர் மற்றும் வணிக நிறுவனமிடருந்து மற்றொரு வணிக நிறுவனம் என பல வகையான விற்பனை சேவைகளைஅளித்து வருகிறது.

இந்த நிறுவனத்தில் தலைவராகசீனாவை சேர்ந்த ஜாக் மா இருந்து வருகிறார். இதற்கு முன் ஆங்கில பாட ஆசிரியராக பணியாற்றிய இவர், இந்நிறுவனத்தினை தொடங்குவதற்காகதனது நண்பர்களிடம் பேசி 60 ஆயிரம் அமெரிக்க டாலர்களை பெற்றுள்ளார்.

தொடக்கத்தில் சீனாவில் கிழக்கு நகரான ஹேங்ஜூவில் உள்ள அவரதுகுடியிருப்பு பகுதியில் அலிபாபா நிறுவனம் நடத்தப்பட்டுவந்துள்ளது. சீனாவில் பணக்காரரகள் பட்டியலில் ஒருவராக உள்ள அவரிடம் 3 ஆயிரத்து 66 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் சொத்துக்கள் உள்ளன என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தனது ஓய்வு அறிவிப்பினை வெளியிட்டுள்ள ஜாக் இது முடிவல்ல என்றும் ஒரு சகாப்தத்தின்தொடக்கம் என்றும் கூறியுள்ளார். கல்வி நோக்கம் சார்ந்தசேவையில் தனதுநேரத்தினை செலவிட முடிவு செய்துள்ளார்.

அடுத்த செய்தி