ஆப்நகரம்

வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகள்: அமெரிக்கா அதிரடி

உலக நாடுகளுக்கு அசராமல் தொடர்ந்து, அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்க அதிபர் ஒபமா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

TNN 18 Mar 2016, 8:58 am
வாஷிங்டன்: உலக நாடுகளுக்கு அசராமல் தொடர்ந்து, அணு ஆயுத சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்து அமெரிக்க அதிபர் ஒபமா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.
Samayam Tamil america imposed new economic blockade on north korea
வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகள்: அமெரிக்கா அதிரடி


உலக நாடுகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல், சர்வதேச உடன்படிக்கைகளையும் மதிக்காமல் அவ்வப்போது, அணு ஆயுத சோதனைகளை வடகொரியா நடத்தி வருகிறது.

அணுகுண்டுகளை வெடித்து சோதனை செய்து வந்த அந்நாடு, சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை அண்மையில் வெடித்து சோதித்தது.

ஹைட்ரஜன் வெடுகுண்டு சோதனை நடத்தியதற்காக வடகொரியா மீது, கடுமையான பொருளாதார தடைகளை விதித்து கடந்த 2-ம் தேதியன்று ஐ.நா., சபை தீர்மானம் நிறைவேற்றியது.

இதனிடையே, கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையில் ஹைட்ரஜன் குண்டுகளை பொருத்தி, அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரை அழித்து விடுவோம் என்று மிரட்டலும் விடுத்தது வடகொரியா.

இந்நிலையில், வடகொரியா மீது புதிய பொருளாதார தடைகளை விதித்து அமரிக்க அதிபர் ஒபமா அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அதில், வடகொரியாவில் அமெரிக்காவின் ஏற்றுமதி மற்றும் முதலீடுகளுக்கு தடை. அமெரிக்காவில் உள்ள வடகொரிய அரசின் சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படும். வட கொரியாவுடன் தொடர்பு வைத்துள்ள எந்தவொரு நபர்மீதும், அவர் அமெரிக்கர் அல்லாதவராக இருந்தாலும் அவர்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்படுவார்கள் என்பன் உள்ளிட்ட பல அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அடுத்த செய்தி