ஆப்நகரம்

பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் மகள் நன்றி!!

பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று யோக நித்ரா செய்யுமாறு கேட்டுக் கொண்டு, அதற்கான வீடியோ பதிவையும் வெளியிட்டு இருந்தார்.

Samayam Tamil 31 Mar 2020, 5:39 pm
பிரதமர் மோடி யோக நித்ரா வீடியோ வெளியிட்டு இருப்பதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil மோடியுடன் இவாங்கா


பிரதமர் மோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பதிவில், ''மன்கிபாத் நிகழ்ச்சியில், நீங்கள் எப்படி உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருக்கிறீர்கள் என்று என்னை கேட்டனர். அதற்கு எந்த சிறப்பு பயிற்சியாளரோ, மருத்துவரையோ நான் வைத்துக் கொள்வது இல்லை. வாழ்க்கையில் தினமும் யோகா செய்வதை கடமையாக கொண்டு இருக்கிறேன்.

உங்களில் பலரும் பிட் ஆக இருக்கலாம். உங்களது வீடியோவையும் மற்றவர்களுடன் பகிருங்கள் என்று தெரிவித்து இருந்தார்''
இன்னும் கொரோனா நுழைய முடியாத குட்டித் தீவு

மோடி பற்றி பேசி வாங்கிக் கட்டிக்கொண்ட கான்
அவரது யோகா வீடியோக்களையும் பகிர்ந்து இருந்தார். உலக மொழிகளில் அந்த வீடியோக்கள் மொழி பெயர்க்கப்பட்டு இருந்தன. இதை பலரும் ரீட்விட் செய்து வந்தனர்.
“நோ கொரோனா பேஷண்ட்” சொன்ன டாக்டர் கடத்தப்பட்டார்!
இந்த நிலையில் இன்றும் யோக நித்ரா என்ற பெயரில் வீடியோ பகிர்ந்து இருந்தார். யோக நித்ரா மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று மோடி குறிப்பிட்டு இருந்தார். இதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா டிரம்ப் நன்றி தெரிவித்து, அற்புதம் என்று பதிவிட்டு இருந்தார்.

கடந்த பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு டிரம்ப் வந்திருந்தபோது அவருடன் இவாங்காவும் வந்து இருந்தார். இது இவாங்காவின் இரண்டாவது இந்தியா பயணமாகும்.

அடுத்த செய்தி