ஆப்நகரம்

எவரெஸ்ட் சிகர சாதனையில் துயரம்; அமெரிக்கர் சாவு; இந்தியரைக் காணவில்லை

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்தார். இந்தியரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNN 22 May 2017, 5:04 pm
ஜம்மு: எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்கும் முயற்சியில் அமெரிக்கர் ஒருவர் உயிரிழந்தார். இந்தியரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil american climber dies indian goes missing after successfully climbing mount everest
எவரெஸ்ட் சிகர சாதனையில் துயரம்; அமெரிக்கர் சாவு; இந்தியரைக் காணவில்லை


அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தின் ஜியார்ஜியானாவைச் சேர்ந்தவர் ரோலந்த் இயர்வுட்(50). அவர் காத்மாண்டுவில் உள்ள எவரெஸ்ட் பர்வார் அமைப்பின் மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் ஈடுபட்டார். அவருடன் உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்த ரவிகுமார் உள்ளிட்டோர் சென்றிருந்தனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 1.28 மணியளவில் ரவிகுமார் எவரெஸ்ட் சிகரத்தின் 8,848 மீட்டர் உயரத்தை அடைந்துள்ளார். அதனை அவரது மலை ஏறும் ஆலோசகர் லக்பா உறுதி செய்தார். அவர்கள் இருவரும் மலை அடிவாரத்திற்கு திரும்பும் போது தனித்தனியே பிரிந்து பாதை மாறி சென்றுள்ளனர்.

ஆலோசகர் லக்பா தற்போது கேம்ப் 4 மருத்துவமனையில் சுய நினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறார். அதேசமயம் ரவிகுமார் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. அவருடனான இணைப்பு துண்டிக்கப்பட்டு விட்டதாக எவரெஸ்ட் பர்வார் அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும் ரோலந்த் உயிரிழந்துவிட்டதாகவும், மற்றவர்கள் குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

An American climber has died and an Indian climber has gone missing on Mount Everest after successfully scaling the world's highest peak.

அடுத்த செய்தி