ஆப்நகரம்

முஸ்லீம் என நினைத்து இந்தியரின் கடையை எரிக்க முயன்ற அமெரிக்க ஆசாமி..!

புளோரிடா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரின் கடையை அமெரிக்கர் ஒருவர் தீயிட்டு எரிக்க முயன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.

TNN 12 Mar 2017, 2:33 pm
புளோரிடா மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரின் கடையை அமெரிக்கர் ஒருவர் தீயிட்டு எரிக்க முயன்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
Samayam Tamil american man tried to fire indian orgin americans shop
முஸ்லீம் என நினைத்து இந்தியரின் கடையை எரிக்க முயன்ற அமெரிக்க ஆசாமி..!


அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து,அமெரிக்கர் அல்லாத மற்ற நாட்டினர் மீதான வெற்றுப்புணர்வு அந்நாட்டு மக்களிடையே வளர்ந்து வருகிறது.குறிப்பாக இந்தியா,பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்,அடிக்கடி அமெரிக்கர்களால் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர்.சமீபத்தில் கூட இரண்டு இந்தியர்கள் அமெரிக்க நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்களும் அந்நாட்டில் அரங்கேறியுள்ளன.

இந்நிலையில் புளோரிடா மாகாணத்தில் அமெரிக்க வாழ் இந்தியர் நடத்தி வரும் கடை ஒன்று,திடீரென தீப்பற்றி எரிந்தது.உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர்,விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.தீ விபத்து குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில்,ரிச்சர்ட் லாயிட் என்ற 64 வயது முதியவர் அந்த கடைக்கு தீ வைத்திருப்பது தெரியவந்தது.

தான் தீ வைத்த கடையின் உரிமையாளர் ஒரு முஸ்லீம் என நினைத்து இந்த செயலில் ஈடுபட்டதாக காவல்துறையினரிடம் லாயிட் தெரிவித்துள்ளார்.லாயிட் மனநலம் குறித்து சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும்,ஆய்வின் முடிவில் அவர் வேண்டுமென்றே இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என புளோரிடா மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.

American man tried to fire Indian orgin American's shop

அடுத்த செய்தி