ஆப்நகரம்

corona in Sunlight: சூரிய ஒளியில் கொரோனா அழியும்? அமெரிக்க ஆய்வு

சூரிய ஒளியில் கொரோனாவின் தீவிரம் பாதியாகக் குறையும் என்று அமெரிக்காவின் அரசாங்க ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால்,

Samayam Tamil 24 Apr 2020, 8:57 am
கொரோனா வைரஸ் சூரிய ஒளியின் தாக்கத்தால் அழியும் என்று இந்தியாவில் பலரும் பேசிவந்த நிலையில், அததே விதமாக வெளிவந்திருக்கிறது அமெரிக்க ஆய்வு ஒன்று.
Samayam Tamil corona globe


உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவல் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முடிவாக நோய்த் தடுப்புக்கோ, அல்லது குணப்படுத்துவதற்கோ மருந்துகள் ஏதும் இல்லாத நிலையில் ‘எத்த தின்னா பித்தம் தெளியும்’ என்கிற மனநிலையில் செயல்பட்ட்டுக்கொண்டிருக்கிறது மருத்துவ உலகம்.

இந்நிலையில், சூரிய வெப்பம் இருக்கும் இடங்களில் கொரோஒனா வைரஸின் தாக்கம் பாதியாக குறைவது வேகமாக நடைபெறுகிறது என்று அமெரிக்காவின் அரசாங்க அறிவியல் தொழில்நுட்ப நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது.

அதாவது, 21 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை மற்றும் 20 சதவீத ஈரப்பதத்தில் 18 மணி நேரமாக உள்ள கொரோனா வைரஸின் ஆயுள், ஈரப்பதத்தை உயர்த்தும் போது 6 மணி நேரமாக குறைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வெப்பம் இன்னும் அதிகமாகும்போது அதிகபட்சமாக 2 நிமிடங்களிலேயே கொரோனா செயலிழந்துவிடும் என்றும் ஆய்வக ஊழியர் ப்ரையன் தெரிவித்துள்ளார்.

Live: ரமலான் வந்தது... ஊரடங்கைத் தளத்தியது ஐக்கிய அரபு அமீரகம்?

கொரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத்தொடங்கிய நேரத்தில், இந்தியாவில் அதிகம் பேரால் பேசப்பட்ட பொய்ச்செய்தியாக இது பார்க்கப்ப்பட்டது. தற்போது வந்திருக்கும் இந்த ஆய்வும் கூட அவதானிப்புகளின் அடிப்படையிலேயே வெளிவந்துள்ளது. இதற்கு முன் வந்த வைரஸ் தொற்றுகள் எல்லாம் கோடைகாலத்தில் தன் தீவிரத்தைக் குறைத்துக் கொண்டன என்பதையும் இந்த ஆய்வில் குறிப்பிடுகின்றனர்.

மேலும், வெப்பத்தால் கொரோனா வைரஸ் தீவிரம் குறைகிறது என்றால், இந்த முறையை நோயாளிகளுக்குப் பரிசோதித்துப் பார்க்கலாமே என்றும் அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Fact Check: மது கொரோனாவைக் கட்டுப்படுத்துமா... W.H.O. சொல்வது என்ன?

வெப்பம் அதிகமான பிரதேசங்களில் தாக்கம் குறைவதற்கு இதுதான் காரணம் என்றும் ஒருசில தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால், எதுவாயினும் அரசுத் தரப்பு அறிவிக்கும் வரை அல்லது உறுதியான ஆய்வுகள் வெளிவரும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம் என்பதில் மட்டும் மாற்றுக்கருத்தில்லை.

அடுத்த செய்தி