ஆப்நகரம்

மற்றொரு கருப்பினத்தவர் சுட்டுக்கொலை - அமெரிக்காவில் பரபரப்பு!

அமெரிக்காவில் மற்றொரு கருப்பின நபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 2 Sep 2020, 4:37 pm

அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் ப்ளாய்ட் என்ற கருப்பின நபர் போலீசாரால் படுகொலை செய்யப்பட்டார். இது சர்வதேச அளவில் பெரிய பிரச்சினையாக உருவெடுத்தது. மேலும், இனவாத பிரச்சினைகளும், போலீஸ் அத்துமீறலும் சர்வதேச அளவில் விவாதப் பொருளாக மாறியது.
Samayam Tamil போராட்டம்


அமெரிக்காவில் கருப்பின மக்கள் போலீசாரால் மோசமாக நடத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் சூழலில், லாஸ் ஏஞ்சலஸில் மற்றொரு கருப்பின நபரை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். சம்பந்தப்பட்ட கருப்பின நபரிடம் கைத்துப்பாக்கி இருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.

சீனாவின் கொட்டத்தை அடக்க இந்தியா மாஸ்டர் பிளான்!

இதில் கொல்லப்பட்ட கருப்பின நபரின் பெயர் டிஜன் கிஸ்ஸீ. இவருக்கு வயது 29. இவர் சைக்கிளில் வந்துகொண்டிருந்தபோது போலீசார் வழியில் மறிக்க முயற்சித்துள்ளனர். டிஜன் உடனே வேகமாக தப்பிவிட்டதாக கூறப்படுகிறது. டிஜனை போலீசார் துரத்தி பிடித்ததும் அவர் ஒரு போலீசாரின் முகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.

அவரிடம் கைத்துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதன்பின் டிஜனுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது டிஜன் தனது துப்பாக்கியை கையில் எடுத்ததால் அவரை சுட்டுக்கொன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

சம்பவ இடத்திலேயே டிஜன் உயிரிழந்துவிட்டார். அவர் உயிரிழந்த சில மணி நேரங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி டிஜனின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராடினர். எல்லோரையும் சுட்டுக்கொன்றுவிட்டால் சிறைகளுக்கு என்ன பயன் என்று போராட்டக்காரர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

அடுத்த செய்தி