ஆப்நகரம்

2000 ஆண்டுகள் பழைய ஃபாஸ்ட் புட் கடை கண்டுபிடிப்பு!

இத்தாலியில் 2000 ஆண்டுகள் பழைய ஃபாஸ்ட் புட் கடை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 27 Dec 2020, 5:43 pm
இத்தாலியில் உள்ள பாம்பேய் பகுதியில் பழங்கால ஃபாஸ்ட் புட் உணவகம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வெஸுவியஸ் எரிமலை 2000 ஆண்டுகளுக்கு முன் வெடித்ததில் இந்த உணவகம் சேதமடைந்துள்ளது.
Samayam Tamil Photo: AP


ஃபாஸ்ட் உணவகத்தில் டெரகோட்டாவில் செய்யப்பட்ட ஜார்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. சூடான உணவுகள் மற்றும் பானங்கள் இந்த கடையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குப்பையில் கிடந்த பூனைக்கு அரசு பதவி!
கடையில் உள்ள சுவரில் கோழி, வாத்து ஆகியவற்றின் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதை வைத்து, உணவகத்தில் கோழிக் கறி, வாத்துக் கறி ஆகியவை விற்பனை செய்யப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

கடையில் இருந்த ஹார்களில் பன்றிக் கறி, மாட்டுக் கறி, மீன், நத்தை போன்ற உணவுப் பொருட்களின் தடயங்களும் கிடைத்துள்ளன. இந்த பழங்கால ஃபாஸ்ட் ஃபுட் கடை ‘The Thermopolium of Regio V' என்று அழைக்கப்பட்டுள்ளது.

இந்த கடை அமைந்துள்ள இடம் பழங்காலங்களில் மிகவும் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, பழங்கால பாம்பேய் மக்களிடையே இந்த உணவகம் மிகவும் பிரபலமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தடா போட்ட டாக்டர்கள்: கட்சி குறித்து ரஜினி புது முடிவு
வெஸுவியஸ் எரிமலை வெடித்தபிறகு பாம்பேய் நகரம் முழுவதும் அழிந்து தடயமே இல்லாமல் போய்விட்டது. அதன்பிறகு இப்பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சி பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்த உணவகத்தில் கிடைத்துள்ள பொருட்கள் பழங்கால பாம்பேய் மக்களின் உணவுப் பழக்கத்தை பற்றிய தகவல்களை தருகின்றன.

அடுத்த செய்தி