ஆப்நகரம்

3 விஞ்ஞானிகளுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு!

இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 2 Oct 2018, 4:19 pm
இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆர்தர் அஷ்கின், டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட், ஜிரார்டு மவ்ரு ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil nobel prize


உலகின் மிகவும் பெருமைக்குரிய விருதாக பெயர் பெற்றுள்ள நோபல் பரிசு பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஆலீஸன் மற்றும் ஹோஞ்ஜோவுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இந்திய நேரப்படி இன்று மதியம் சுமார் 3.30 மணியளவில் அறிவிக்கப்பட்டது. நோபல் பரிசு ஆர்தர் அஷ்கின், டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட், ஜிரார்டு மவ்ரு ஆகிய மூவருக்கும் இயற்பியலக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்தர் ஆஷ்கின் அமெரிக்காவைச் சேர்ந்தவர். ஜிரார்டு மவ்ரு பிரான்ஸ் நாட்டையும், டோன்னா ஸ்ட்ரிக்லேண்ட் கனடா நாட்டைச் சேர்ந்தவர்களும் ஆவர். லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி