ஆப்நகரம்

ஹெச்1பி விசா விவகாரம்: அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சரிடம் அருண் ஜேட்லி முறையீடு

ஹெச்1பி விசா விதிமுறைகளை அமெரிக்கா கடுமையாக்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக, அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சரிடம், நிதியமைச்சர் அருண் ஜேட்லி முறையீடு செய்துள்ளார்.

TNN 21 Apr 2017, 8:41 am
ஹெச்1பி விசா விதிமுறைகளை அமெரிக்கா கடுமையாக்கியுள்ள நிலையில், இதுதொடர்பாக, அந்நாட்டு வர்த்தகத் துறை அமைச்சரிடம், நிதியமைச்சர் அருண் ஜேட்லி முறையீடு செய்துள்ளார்.
Samayam Tamil arun jaitley takes up h 1b visa issue with us commerce secretary
ஹெச்1பி விசா விவகாரம்: அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சரிடம் அருண் ஜேட்லி முறையீடு


ஹெச்1பி விசா விதிமுறைகளை, இந்திய ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு நிறுவனங்களும் தவறாகப் பயன்படுத்துவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக, ஹெச்1பி விசா விதிமுறைகளை கடுமையாக்கி, அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அமெரிக்காவில் இயங்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்பட அனைத்திலும், அமெரிக்கர்களுக்கே வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதனால், இந்தியா உள்பட அமெரிக்காவில் அலுவலகங்கள் வைத்துள்ள பல நாடுகளும் சிக்கலை சந்தித்துள்ளன. தங்களது பணியாளர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களை ஒட்டுமொத்த நீக்கினால் வர்த்தக இழப்பை சந்திக்க நேரிடும் என்றும் அந்த நிறுவனங்கள் கவலை தெரிவிக்கின்றன.

குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த முன்னணி ஐ.டி, நிறுவனங்கள், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் வர்த்தகப் பணிகளில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த பிரச்னையில் இந்திய நிறுவனங்கள் மற்றும் ஊழியர்களுக்குச் சலுகை காட்டும்படி, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அமெரிக்க வர்த்தகத் துறை அமைச்சர் வில்புர் ராஸ்-க்கு தொலைபேசி வாயிலாக கோரிக்கை வைத்துள்ளார்.

இந்திய ஐடி, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்களின் பெருமளவு வர்த்தகம் அமெரிக்க சந்தையை மையப்படுத்தியே இருப்பதால், அவற்றுக்குச் சலுகை காட்டினால் இருதரப்பு வர்த்தக உறவு மேம்பட வாய்ப்புள்ளதாகவும் அருண் ஜேட்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுபற்றி தேவையான நடவடிக்கைகளை தொடர்ந்து, மத்திய அரசு மேற்கொண்டுவருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Finance Minister Arun Jaitley has “strongly raised” the H-1B visa issue with US Commerce Secretary Wilbur Ross, highlighting the important role played by highly skilled Indian professionals in America, officials said.

அடுத்த செய்தி