ஆப்நகரம்

பூமியை நெருங்கி வரும் முரட்டு விண்கல்.. மக்களே உஷார்!

பூமியை நோக்கி முரட்டுத்தனமான விண்கல் நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 6 Feb 2021, 12:07 am
2020ஆம் ஆண்டில் பூமிக்கு அருகாமையில் பல்வேறு விண்கற்கள் நெருங்கி வந்து கடந்து சென்றதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதேபோல, ஜனவரி மாதத்திலும் ஒரு சில விண்கற்கள் பூமிக்கு அருகே கடந்து சென்றன.
Samayam Tamil Asteroid


இந்தாண்டிலும் பல்வேறு விண்கற்கள் பூமியை நெருங்கி வருவதாக கூறப்படுகிறது. இதன்படி, 2020XU6 என்ற மிகப்பெரிய விண்கல் பூமியை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கெட்ட வார்த்தை பேசினால் ஜெயில் தண்டனை.. பதறவைக்கும் சட்டம்!
இந்த விண்கல் 213 மீட்டர் நீளம் கொண்டது. இந்த விண்கல் அமெரிக்காவில் உள்ள பிரபல சுதந்திர தேவதை சிலையை விட இருமடங்கு பெரியது என்று கூறப்படுகிறது.

தற்போது மணிக்கு 30,240 கிலோமீட்டர் வேகத்தில் சூரிய குடும்பத்துக்குள் இந்த விண்கல் பயணித்து வருகிறது. இந்த கணக்குப்படி, விண்கல்லால் பூமியை ஒரு மணி நேரத்தில் சுற்றிவர முடியும்.

இந்த விண்கல் பூமியில் மோதினால் மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனினும், இந்த விண்கல் பூமியில் மோதுவதற்கு வாய்ப்பில்லை என நாசா தெரிவித்துள்ளது.

கொரோனா எப்படி உருவானது? வௌவால் குகைகளில் WHO ஆய்வு!
சுமார் 460 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரிய குடும்பம் உருவானபோது ஏற்பட்ட வெடிப்பில் சிதறிய சிதைவுகள்தான் விண்கற்கள் என்று நாசா கூறுகிறது. சூரியனை சுற்றி பல லட்சக் கணக்கான விண்கற்கள் சுற்றி வருவதாக தெரிகிறது. இதேபோல, செவ்வாய், வியாழன் ஆகிய கிரகங்களையும் விண்கற்கள் சுற்றி வருகின்றன.

அடுத்த செய்தி