ஆப்நகரம்

கொரோனா தடுப்பூசியில் புதிய சிக்கல்!

கொரோனா தடுப்பூசி சோதனையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து மீண்டும் புதிதாக சோதனையை தொடங்கவுள்ளதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 26 Nov 2020, 10:42 pm

உலகளவில் கொரோனாவுக்கு ஏராளமான நிறுவனங்கள் தடுப்பூசி உருவாக்க முயற்சித்து வருகின்றன. இதி ஃபைசர், மாடெர்னா போன்ற சில நிறுவனங்கள் இறுதிகட்டத்தையும் எட்டி வெற்றிபெற்றுள்ளன.
Samayam Tamil Representational image


இங்கிலாந்தில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகமும், அஸ்ட்ராஜெனகா நிறுவனமும் இணைந்து கொரோனாவுக்கு தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்நிலையில், தடுப்பூசி உற்பத்தியில் தவறுகள் ஏற்பட்டிருப்பதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துள்ளது.

இதையடுத்து, தடுப்பூசியின் ஆரம்பகட்ட சோதனை முடிவுகள் குறித்து சந்தேகங்கள் எழுந்துள்ளன. சோதனையின்போது சிலருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியும், சிலருக்கு இரண்டு டோஸ்களும் போடப்பட்டுள்ளன.

கொரோனா சோதனையில் கலக்கும் ரோபோட்!

இதில், ஒரு டோஸ் போடப்பட்டவர்கள் இரண்டு டோஸ் போடப்பட்டவர்களை காட்டிலும் பாதுகாப்பாக இருப்பதாக முடிவுகள் கூறுகின்றன. ஒரு டோஸ் போடப்பட்டவர்களுக்கு தடுப்பூசி 90% திறனுடன் இருக்கிறது. ஆனால், இரண்டு தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு 62% திறனுடன் இருக்கிறது.

இரண்டையும் சேர்த்து, தடுப்பூசி 70% திறனுடன் இருப்பதாக அஸ்ட்ராஜெனகா தெரிவித்துவிட்டது. ஆனால், ஏன் சிலருக்கு மட்டும் ஒரு டோஸ் போடப்பட்டது என்பது குறித்து விளக்கமளிக்கப்படவில்லை. இந்த தடுப்பூசி இங்கிலாந்திலும், பிரேசிலிலும் சோதிக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி குறித்து சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், உலகளவில் மீண்டும் சோதனையை புதிதாக தொடங்கவிருப்பதாக அஸ்ட்ராஜெனகா நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பாஸ்கல் சோரியட் தெரிவித்துள்ளார். எனினும், இந்த சோதனைக்கு குறைந்த அளவிலான நோயாளிகள் மட்டும் போதும் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி