ஆப்நகரம்

ஆப்கனில் சாலை விபத்து: 11 பேர் பலி

ஆப்கன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

TNN 2 Apr 2016, 3:13 pm
காபூல்: ஆப்கன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 11 பேர் பலியானதாக அந்நாட்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil at least 11 killed in a road accident in afghanistan officials
ஆப்கனில் சாலை விபத்து: 11 பேர் பலி


இது குறித்து செய்தி தொடர்பாளர் கூறுகையில்,'3 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்தனர். கவனக்குறைவு காரணமாக விபத்து நேர்ந்ததாகவும், விபத்தில் சிக்கி பலியானவர்களில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 21ஆம் தேதி துவங்கி 13 நாட்கள் நடைபெறும் பெர்சியன் புத்தாண்டு விழா கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ள வந்தவர்கள், குடும்பமாக பிக்னிக் வந்தவர்கள் விபத்தில் சிக்கியதாக கூறப்பட்டுள்ளது.

சாலை பராமரிப்பு, சாலை விதிகளை மீறுவது உள்ளிட்டவைகளால் இது போன்ற சாலை விபத்துக்கள் ஆப்கன் நாட்டில் அதிகளவில் நடப்பது வழக்கம்.

அடுத்த செய்தி