ஆப்நகரம்

பெருமழையால் நிலச்சரிவு; 36 பேர் பலி - உகாண்டாவில் மண்ணில் புதைந்த ஆரம்பப் பள்ளி!

கம்பாலா: தொடர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் பலியாகினர்.

Samayam Tamil 13 Oct 2018, 3:52 am
உகாண்டா நாட்டின் தெற்கே உள்ள புதுதா மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெருமழை பெய்து வந்தது. இதனால் சூமே ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோரப் பகுதிகள் நீரில் மூழ்கின.
Samayam Tamil Uganda


பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிக்கு அருகே இருந்த இரு கிராமங்கள் பெரும் சேதமடைந்துள்ளன. இதுவரை உயிரிழந்த 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மலுடாவில் பிரைமரி பள்ளியின் ஒரு பகுதி மண்ணுக்குள் புதைந்துள்ளது.

இதனால் 200 பள்ளிக் குழந்தைகள் மாயமாகினர். அவர்களை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெருமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் விலங்குகளும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அந்நாட்டு அதிபர் யோவெரி முசெவெனி, புதுதா மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு செய்தி மிக வருந்தத்தக்கது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க மாற்று நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.

At least 36 dead in Uganda landslides as school disappears beneath mud.

அடுத்த செய்தி