ஆப்நகரம்

தொடரும் துப்பாக்கி மரணங்கள்; லாஸ்வேகாஸ் இசை நிகழ்ச்சியில் இருவர் பலி!

அமெரிக்க இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகினர்.

TNN 2 Oct 2017, 1:35 pm
லாஸ் வேகாஸ்: அமெரிக்க இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இருவர் பலியாகினர்.
Samayam Tamil atleast 2 dead and 24 injured in las vegas
தொடரும் துப்பாக்கி மரணங்கள்; லாஸ்வேகாஸ் இசை நிகழ்ச்சியில் இருவர் பலி!


அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் ’மேண்டலே பே’ என்ற ஹோட்டல் அருகே இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று கொண்டிருந்த போது, மர்ம நபர் ஒருவர் கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இதையடுத்து பொதுமக்கள் சிதறி ஓடினர்.

இந்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், பொதுமக்களை பாதுகாப்பாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

துப்பாக்கியால் சுட்ட மர்மநபரை, போலீசார் சுட்டுக் கொன்றனர். இதில் போலீசார் ஒருவரும் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து, அங்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Atleast 2 dead and 24 injured in Las vegas.

அடுத்த செய்தி