ஆப்நகரம்

ஜூலை முதல் ஆன் லைனில் விசா விண்ணப்பிக்கலாம்!

வரும் ஜூலை முதல் ஆன் லைனில் விசா விண்ணப்பிக்கும் முறையை இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.

TOI Contributor 19 Jun 2017, 12:03 pm
மெல்போர்ன்: வரும் ஜூலை முதல் ஆன் லைனில் விசா விண்ணப்பிக்கும் முறையை இந்தியர்களுக்கு ஆஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
Samayam Tamil australia announces online visa applications for indians from july
ஜூலை முதல் ஆன் லைனில் விசா விண்ணப்பிக்கலாம்!


ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், அந்நாட்டு அரசு விசா விண்ணப்பிக்கும் முறையை இந்தியர்களுக்கு எளிதாக்க திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, வரும் ஜூலை 1ம் தேதி முதல், அந்நாட்டு செல்ல விரும்பும், இந்தியர்கள் ஆன் லைன் மூலமாக விசா விண்ணப்பிக்கலாம்.

இந்த புத்தாண்டு துவங்கிய முதல் நான்கு மாதங்களில் மட்டும் ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்தியர்களின் எண்ணிக்கை 65,000மாக இருந்துள்ளது. இதனால், இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க, அந்நாட்டு சுற்றுலாத்துறை இந்த விசா முறையை அமல்படுத்த முடிவு செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்புத்துறை துணை அமைச்சர் அலெக்ஸ் ஹாக் கூறுகையில்,’ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணமாகவும், தொழில் ரீதியாகவும் வர விரும்பும் இந்தியர்களுக்காகவே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தவிர, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் தங்களது குடும்ப உறவினர்களை சந்திக்க விரும்பும் இந்தியர்களுக்கு இது வசதியாக இருக்கும்,’ என்றார்.

MELBOURNE: The Australian government announced that Indian nationals can apply for a visitor visa online starting July 1.

அடுத்த செய்தி