ஆப்நகரம்

இன்னொரு புதிய கொரோனா கிளம்பிருச்சு: மீண்டும் ஊரடங்கு அமல்!

இன்னொரு உருமாறிய கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதால் பிரிஸ்பேனில் மூன்று நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Samayam Tamil 8 Jan 2021, 7:04 pm
ஆஸ்திரேலியாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரமான பிரிஸ்பேனில், புதிய உருமாறிய கொரோனா தொற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பிரிஸ்பேனில் இன்று முதல் மூன்று நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
Samayam Tamil Representational image


இங்கிலாந்தில் அதிவேகத்தில் பரவக்கூடிய கொரோனா வைரஸ் சில வாரங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளுக்கு பரவிவிட்டது. இதேபோல, தென்னாப்பிரிக்காவிலும் வேறு ஒரு புதிய கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது.

டொனால்ட் ட்ரம்பை கைது செய்ய உத்தரவு!
இந்நிலையில், பிரிஸ்பேனில் இன்னொரு புதிய உருமாறிய கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் நாடு முழுவதும் பரவாமல் தடுப்பதற்காக உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கவும், மருத்துவ சேவைகளுக்காகவும், பணி மற்றும் படிப்பு சார்ந்த தேவைகளுக்காக மட்டுமே வெளியே செல்லலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. குயின்ஸ்லாந்து மாகாணத்தில் இந்த வைரஸை பரவவிடாமல் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாகாண அரசு தெரிவித்துள்ளது.

மாட்டிவிடப் பார்த்த வாரிசு நடிகையை அதிர வைத்த பிரபல நடிகர்
இதுகுறித்து குயின்ஸ்லாந்து பிரீமியர் ஆன்னஸ்டசியா செய்தியாளர்களிடம் பேசியபோது, “ஊரடங்கை இப்போதே அமல்படுத்தாவிட்டால், 30 தினங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். அடுத்த சில தினங்கள் தொழில்களுக்கு கடினமாக இருக்கும். ஆனால், எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் யோசிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி