ஆப்நகரம்

வேலை வாய்ப்பு இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய முடிவு!

வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.

Samayam Tamil 12 Apr 2018, 9:40 pm
வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அறிவித்துள்ளார்.
Samayam Tamil Private-job-reservation2


வங்க தேசத்தில் வேலையில்லாத இளைஞர்கள் பலர் திரண்டு அரசு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை ரத்து செய் வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். அந்நாட்டில் அளிக்கப்பட்டு வரும் 56% இட ஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இதன் எதிரொலியாக அந்த நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனா வேலை வாய்ப்பில் அரசு அளித்த இட ஒதுக்கீட்டை முற்றிலும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.

அதே சமயத்தில் சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க மாற்றுவழியை அறிவிப்பதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

அடுத்த செய்தி