ஆப்நகரம்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் நியமனம்

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழர் ஸ்ரீ சீனிவாசன் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது.

TOI Contributor 17 Mar 2016, 12:28 pm
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் கார்லண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழர் ஸ்ரீ சீனிவாசன் தேர்வு செய்யப்படாதது ஏமாற்றத்தை அளித்துள்ளது. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மேரிக் கார்லன்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். pic.twitter.com/H55l6JgI2Y— Samayam Tamil (@SamayamTamil) March 17, 2016 அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதியாக தமிழர் ஸ்ரீ சீனிவாசனை அமெரிக்க அதிபர் ஒபாமா நியமிக்கலாம் என்று கருதி வந்த நிலையில் அந்தப் பதவிக்கு 63 வயது மெரிக் கார்லண்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil barack obama nominates merrick garland to fill antonin scalias seat
அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக மெரிக் நியமனம்


அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 9 நீதிபதிகள் உள்ளனர். அந்த நாட்டு சட்டத்தின்படி நீதிபதிகள் இறக்கும் வரை பதவியில் நீடிக்கலாம். உச்ச நீதிமன்ற நீதிபதி ஸ்காலியா உயிரிழப்பை அடுத்து காலியிடத்தை நிரப்ப அதிபர் ஒபாமா உத்தரவிட்டு இருந்தார்.

அமெரிக்காவின் கொலம்பியா மாகாண சர்க்கியூட் நீதிமன்ற நீதிபதிகளில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நீதிபதிகள் நியமிக்கப்படுவது வழக்கம்.

அதன்படி மூன்று நீதிபதிகளின் பெயர் இறுதி செய்யப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்தது. இதில், தமிழகத்தில் திருநெல்வேலியை பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ஸ்ரீ சீனிவாசனின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தது.

இவருடன் நீதிபதிகள் மெரிக் கார்லண்ட், பிரவுண் ஜேக்சன் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்று இருந்தன.

அமெரிக்க உச்சநீதிமன்றத்துக்கு புதிய நீதிபதியாக மெரிக் கார்லண்ட்டை அதிபர் ஒபாமா அறிவித்தார். ஸ்ரீ சீனிவாசன் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

அடுத்த செய்தி