ஆப்நகரம்

திருமண வாழ்வில் 27 ஆண்டுகளை கடந்த ஒபாமா.! உணர்ச்சி பூர்வமான பதிவு..

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்சல் ஒபாமா இருவரின் 27 வைத்து திருமண நாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராமில் சுவாரசிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

Samayam Tamil 4 Oct 2019, 8:14 pm
அமெரிக்காவின் அதிபரான முதல் கறுப்பினத்தவரை சேர்ந்தவர் என்ற பெருமை பராக் ஒபாமாவிற்கு உள்ளது. 44 வது அதிபரான பட்டியலில் இடம் பெற்ற இவர் அமெரிக்க மக்களின் சகோதரன் போலவே தன்னுடைய ஆட்சியை கையாண்டார். இவர் செல்லும் இடமெங்கும் ஒபாமா ஒபாமா என்ற சத்தம் அரங்குகளை அலங்கரித்து விடும்.
Samayam Tamil 8


அரசியலில் இவருக்கு உள்ள காதல் தனது குடும்பத்தின் மேலும் படர்ந்திருந்தது. இவருக்கு மிச்சல் ராபின்சன் ஒபாமா என்ற மனைவியும், மலியா ஒபாமா மற்றும் சாஷா ஒபாமா என்று ஐரு மகள்களும் உள்ளனர்.


ஒபாமா தம்பதியினருக்கு அக்டோபர் 3 1992 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்நிலையில் நேற்று இவர்களது திருமண நாளை கொண்டாடிய இவர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த படத்தை ஒபாமா தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


அந்த புகைப்படத்தில் இந்த பதிவையும் குறிப்பிட்டுள்ளார். ''Like the Beatles said It's getting better all the time. Thanks, babe, for 27 amazing years.!. சூரியன் மறையும் நேரத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி மிச்சல், ஒபாமாவை அன்போடு அணைத்தபடி இருக்கிறார். ''பீட்லெஸ்'' என்பது ஒரு ஆங்கில பாப் பாடல். இப்பாடலில் வரும் வரும் வரிகள் போலவே இவர்களது வாழ்க்கையும் பயணிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார் ஒபாமா.

பொதுவாக சில புகைப்படங்களுக்கு வார்த்தைகள் தேவையில்லை. புகைப்படமே உணர்வுகளை வெளிப்படுத்திவிடும். அந்த வகையில் இந்த புகைப்படத்துக்கு எந்த விளக்கங்களும் தேவையற்றதுதான். இதை நீங்களே பாருங்கள். இந்த திருமண நாளை போன்று மேலும் பல ஆண்டுகள் இவர்களது திருமண நாள் அளவற்ற காதலுடன் தொடரட்டும்.

அடுத்த செய்தி