ஆப்நகரம்

இது வெறும் டிரெய்லர்தான்.. 3 நாளில் 30 உத்தரவுகள்.. அதிரடி காட்டும் ஜோ பைடன்

அமெரிக்க அதிபராக பதவியேற்ற 3 நாட்களில் 30 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார் ஜோ பைடன்.

Samayam Tamil 23 Jan 2021, 5:15 pm
கடந்த நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றிபெற்றார். ஜனவரி 20ஆம் தேதியன்று ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றுக்கொண்டார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார்.
Samayam Tamil Joe Biden


பதவியேற்று கடந்த மூன்று நாட்களில் 30 உத்தரவுகளில் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். இவை அனைத்துமே பெரும்பாலும், முந்தைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்யும் வகையில் இருக்கின்றன.

டிக்டாக் வீடியோ எடுத்தபோது விபரீதம்.. சிறுமி பரிதாபமாக மரணம்!
பதவியேற்ற முதல் நாளில் 17 உத்தரவுகளில் பைடன் கையெழுத்திட்டார். இப்போது வரை 30 உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். முதல் உத்தரவில் 100 நாள் மாஸ்க் சேலஞ்சை அறிமுகப்படுத்தினார். இதுபோக, உலக சுகாதார அமைப்புடன் மீண்டும் இணைய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொரோனாவால் அமெரிக்கா சந்திக்கும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள மூன்றாவது உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இதுபோக, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இணைவது, இஸ்லாமியர்கள் அமெரிக்கா வர விதிக்கப்பட்ட தடையை நீக்குவது உள்ளிட்ட உத்தரவுகளிலும் கையெழுத்திட்டுள்ளார்.

உலகப் போரை மிஞ்சிய கொரோனா உயிர்பலி.. பைடனின் 100 நாள் சேலஞ்ச்!
குடியேற்ற அமைப்பை நவீனமயமாக்குவதற்காக குடியேற்ற மசோதாவை காங்கிரஸுக்கு அனுப்பியுள்ளார் பைடன். பாலின வேறுபாட்களை ஒழிப்பதற்காக, பாலின அடிப்படையில் அலுவலகங்களில் நடக்கும் பாகுபாட்டை ஒழிக்க மற்றொரு உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

மேலும், இந்த உத்தரவுகள் எல்லாம் வெறும் ஆரம்ப புள்ளிகள் மட்டுமே என செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் தெரிவித்தார்.

அடுத்த செய்தி