ஆப்நகரம்

வட கொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிய தடை!

இசை, இணையம், மது, மதத்தை தொடர்ந்து நீல நிற ஜீன்ஸ் அணிய வட கொரிய அரசு தடை விதித்துள்ளது.

TOI Contributor 12 Sep 2016, 1:31 am
இசை, இணையம், மது, மதத்தை தொடர்ந்து நீல நிற ஜீன்ஸ் அணிய வட கொரிய அரசு தடை விதித்துள்ளது.
Samayam Tamil blue jeans banned in north korea
வட கொரியாவில் நீல நிற ஜீன்ஸ் அணிய தடை!


உலகிலேயே வாழ்வதற்கு ஆபத்தான நாடு என்று வடகொரியா அழைக்கப்படுகிறது. தொலைக்காட்சி, மது, இசை இல்லாமல் ஒரு நாட்டில் வாழ்வது போதாது என்று நீல நிற ஜீன்ஸுக்கும் வட கொரியா அரசு தடைவிதித்துள்ளது. வடகொரியாவில் பல்வேறு தடைகள் உள்ளன. மக்கள் தங்களின் சொந்த விருப்பத்தின் பேரில் எதையுமே செய்ய முடியாது. கார் ஓட்டுவதற்கு வடகொரியாவில் தடை. மேலும் விருப்பியபடி முடி வெட்டிக்கொள்ளக்கூடாது. அரசு அங்கீகரித்துள்ள 28 வகைகளில் ஒன்றை தெரிவு செய்து முடி வெட்டிக்கொள்ள வேண்டும்.

தற்போது நீல நிற ஜீன்ஸூக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நீல நிறம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குறியீடு என்று கருதி வடகொரிய அதிபர் கிம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். மதங்களை பரப்புவது, சர்வதேச அளவில் தொலைபேசியில் பேச, அரசு பற்றி பேசுவது, வெளிநாடு செல்வது, ஆபாசம் திரைப்படம் எடுப்பது, இணையம் இவை அனைத்தும் இங்கு தடை செய்யப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி