ஆப்நகரம்

செக்ஸ் பொம்மையை திருமணம் செய்த பாடிபில்டர் - தேனிலவுக்கும் தயார்!

பாடி பில்டர் ஒருவர், செக்ஸ் பொம்மையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.

Samayam Tamil 27 Nov 2021, 10:39 pm
கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாடி பில்டர் ஒருவர், செக்ஸ் பொம்மையை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது.
Samayam Tamil யூரி டோலோச்கோ


மத்திய ஆசிய நாடான கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த, 36 வயதாகும் யூரி டோலோச்கோ என்ற பாடிபில்டர் செக்ஸ் பொம்மையை திருமணம் செய்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமானவர். இந்நிலையில், தனது முதல் செக்ஸ் பொம்மை உடைந்து விட்டதாகவும், தற்போது அதே போல், இரண்டாவது செக்ஸ் பொம்மையை திருமணம் செய்து கொண்டதாகவும, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பாடி பில்டர் யூரி டோலோச்கோ தெரிவித்ததாவது:
எனது இரண்டாவது மனைவி லூனாவுடன் தேனிலவை அனுபவிக்கும் வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவில்லை. கொரோனா தொற்று நோய் அனைவரின் திட்டங்களையும் பெருமளவில் மாற்றி விட்டது. எனவே பணி நிமித்தமாக பல்கேரியா நாட்டுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. உடன், லூனாவை அழைத்து வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
'ஒமைக்ரான்' வைரஸ் எதிரொலி - சர்வதேச விமான சேவை ரத்து!
இது ஒரு வேலைப் பயணம். ஆனால் அது மிகவும் ரொமாண்டிக்காக இருந்தது. நான் அதை ஒரு தேனிலவு போலவே கருதுகிறேன். நாங்கள் தலைநகர் சோபியாவில் சுமார் ஒரு வாரம் தங்கி இருந்தோம்; அது அற்புதமாக இருந்தது. ஒருமுறை, நாங்கள் காதல் விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, சப்ளையர் முதலில் என் மனைவியைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்; பிறகு எங்களைப் பார்த்து அவர் மகிழ்ந்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாடி பில்டர் யூரி டோலோச்கோ தனது முதல் செக்ஸ் பொம்மை மனைவிக்கு, மார்கோட் என பெயர் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி