ஆப்நகரம்

அமெரிக்காவில் ஆற்றில் விழுந்த போயிங் விமானம்: உயிர் தப்பிய 136 பயணிகள்!

அமெரிக்காவில் ஓடு பாதையில் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடாவில் உள்ள செயிண்ட் ஜான் ஆற்றில் விழுந்துள்ளது.

Samayam Tamil 4 May 2019, 10:49 am
அமெரிக்காவில் ஓடு பாதையில் சென்ற போயிங் 737 ரக விமானம் புளோரிடாவில் உள்ள செயிண்ட் ஜான் ஆற்றில் விழுந்துள்ளது.
Samayam Tamil Flight


அமெரிக்காவில் கியூபாவிலிருந்து, நவல் என்ற விமான நிலையத்திற்கு 136 பயணிகளை ஏற்றிக்கொண்டு போயிங் 737 விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது, நவல் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது, புளோரிடாவிலுள்ள ஜாக்சன்வில்லி பகுதிக்கு அருகில் உள்ள செயிண்ட் ஜான் ஆற்றில் விழுந்தது. எனினும், இந்த விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருபக்கம் விமானத்தின் இயக்கத்தை நிறுத்துவதற்கு பணியாளர்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி