ஆப்நகரம்

வெடிகுண்டு மூலப்பொருட்கள், தற்கொலை அங்கிகள் பறிமுதல் - இலங்கையில் மீண்டும் அதிர்ச்சி!

இலங்கையின் அம்பாறை சம்மாந்துறை பகுதியில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Apr 2019, 7:58 pm
ஈஸ்டர் திருநாளின் போது, இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் உலகையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
Samayam Tamil Srilanka Blast


உயிரிழந்தவர்களின் பல்வேறு வெளிநாட்டவர்களும் அடங்குவர். இதையடுத்து நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

ஏற்கனவே உளவுத்துறை குண்டுவெடிப்பு குறித்து எச்சரிக்கை அளித்ததாகவும், அரசு அதனை அலட்சியம் செய்ததாகவும் தகவல் வெளியானது. இது பொதுமக்களை பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்நிலையில் காவல்துறை தலைவர், பாதுகாப்பு செயலர் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதற்கிடையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்ந்து 2வது முறையாக தாக்குதல் நடத்தக்கூடும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் போலீசார் உச்சக்கட்ட உஷார் நிலையில் இருக்கின்றனர். இந்த சூழலில் இலங்கையின் அம்பாறை சம்மாந்துறை பகுதியில் வெடிகுண்டு மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதில், வெடிகுண்டு தயாரிப்பதற்கான டெட்டனேட்டர்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை அடங்கும். இந்த சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கே இருப்பிடமான அலரி மாளிகை அருகே தற்கொலை அங்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக, தனது நாட்டு மக்களிடம் பிரதமர் ரணில் மன்னிப்பு கோரியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் மற்றும் தேவாலயங்களை மறுசீரமைப்பு செய்ய உறுதி கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி