ஆப்நகரம்

உலகப்போரில் வெடிக்காத குண்டுகளை இன்றும் தேடும் ஜப்பான்!

இரண்டாம் உலகப் போரின்போது, வெடிக்காத குண்டுகளைக் கண்டறிந்து ஜப்பான் அரசு வெடிக்கச் செய்வது வருகிறது.

TNN 2 Oct 2017, 4:58 pm
ஜப்பான்: இரண்டாம் உலகப் போரின்போது, வெடிக்காத குண்டுகளைக் கண்டறிந்து ஜப்பான் அரசு வெடிக்கச் செய்வது வருகிறது.
Samayam Tamil bombs which used in world war ii has been identified japan and blown in the safe seaside areas
உலகப்போரில் வெடிக்காத குண்டுகளை இன்றும் தேடும் ஜப்பான்!


ஜப்பானின் அக்கானிவா என்ற பகுதியில் துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளும்போது, இரண்டாம் உலகப் போரின்போது, வெடிக்காத குண்டுகளை ஜப்பான் கண்டறிந்தது.

இந்தக் குண்டுகளைச் செயலிழக்க முடியாது என்பதால், அவற்றைப் பாதுகாப்பான கடல் பகுதிகளில் ஜப்பான் வெடிக்கச் செய்து வருகிறது. இதுவரையில், 103 குண்டுகள் கண்டுபிக்கப்பட்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவைத் தவிர, மேலும் 2000 தொன் குண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் கண்டறிந்து வெடிக்கச் செய்வதற்கு 70 ஆண்டுகள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

Bombs which used in World War II has been identified Japan and blown in the safe seaside areas.

அடுத்த செய்தி