ஆப்நகரம்

10 நிமிடம் பணக்காரியாக இருந்த அமெரிக்கப் பெண்

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வங்கி பரிவர்த்தனையில் நேர்ந்த தவறினால் 10 நிமிடங்களுக்கு லட்சாதிபதியாக இருந்துள்ளார்.

Samayam Tamil 21 Jul 2018, 3:34 pm
அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வங்கி பரிவர்த்தனையில் நேர்ந்த தவறினால் 10 நிமிடங்களுக்கு லட்சாதிபதியாக இருந்துள்ளார்.
Samayam Tamil GYSmqoza_400x400


அமெரிக்காவின் பாஸ்டன் நகரத்தைச் சேர்ந்தவர் எலென் பிளெமிங். 26 வயதான இவரது கணக்கில் அண்மையில் 50 டாலருக்குப் பதிலாக 1.1 மில்லியன் டாலர் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இதை அறிந்த அந்தப் பெண் வங்கி அதிகாரியைத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். இதனையடுத்து 10 நிமிடங்களில் கூடுதலாக செலுத்தப்பட்ட தொகை அவரது கணக்கிலிருந்து கழித்துக்கொள்ளப்பட்டது.
புளோரிடாவைச் சேர்ந்த எலென் பிளெமிங் என்ற மற்றொரு பெண்ணுக்குச் செலுத்த வேண்டிய 1.1 பில்லியன் டாலர் தொகை வங்கி ஊழியரின் தவறினால் எலென் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது.

அடுத்த செய்தி