ஆப்நகரம்

அதிபருக்கும் கொரோனா: பிரேசில் மக்கள் அதிர்ச்சி!!

பிரேசில் அதிபர் ஜெயர் போல்சனரோவுக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 7 Jul 2020, 10:08 pm
கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, ஒட்டுமொத்த உலகமே தமது கொரோனா பிடியில் வைத்துள்ள கொரோனா வைரஸ், சாமானியர்கள் முதல் சாம்ராஜ்ஜியத்தில் உள்ளவர்கள் வரை, எல்லோரையும் பராபட்சமின்றி தொற்றி கொண்டு வருகிறது.
Samayam Tamil brazil president


பிரிட்டன் இளவசரர் சார்லஜ், அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன், ரஷிய அதிபர் என்று கொரோனா நோய்த் தொற்று ஆளான விஐபிக்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இவர்களின் வரிசையில் தற்போது பிரேசில் அதிபர் ஜெயர் போல்சனரோவும் இணைந்துள்ளார். தமக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரே இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

காற்றிலேயே பரவுகிறதா கொரோனா- உலக சுகாதார நிறுவனம் ஆற அமர சொல்வதென்ன?

இதையடுத்து, மருத்துவர்களின் ஆலோசனைப்படி அவர், வீட்டிலேயே தம்மைத்தானே தனிமைப்படுத்தி கொள்வார் அல்லது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவார் எனத் தெரிகிறது.

உலக அளவில் கொரோனா நோய்த்தொற்று ஆளானோரின் எண்ணிக்கையில், அமெரிக்காவுக்கு அடுத்தப்படியாக பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

அங்கு இதுநாள்வரை 16.28 லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி