ஆப்நகரம்

லண்டன் பிரிட்ஜ் தாக்குதலுக்கு 3000 ரோஜா பூக்கள் கொடுத்து அஞ்சலி செலுத்திய இஸ்லாமியர்கள்!

கடந்த வாரம் நடந்த லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் உயிரிழந்த 8 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் 3000 ரோஜா பூக்களை பாதசாரிகளிடம் கொடுத்தனர்.

TNN 12 Jun 2017, 5:46 pm
லண்டன் : கடந்த வாரம் நடந்த லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் உயிரிழந்த 8 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அங்கு வசிக்கும் இஸ்லாமியர்கள் 3000 ரோஜா பூக்களை பாதசாரிகளிடம் கொடுத்தனர்.
Samayam Tamil british muslims hand out 3000 roses at london bridge after attack
லண்டன் பிரிட்ஜ் தாக்குதலுக்கு 3000 ரோஜா பூக்கள் கொடுத்து அஞ்சலி செலுத்திய இஸ்லாமியர்கள்!


இஸ்லாமியர்கள் அடங்கிய குழு ஒன்று லண்டன் பிரிட்ஜ் அல்லது எந்த பிரிட்ஜூம் கீழே விழாமல் பாதுகாப்போம் என்று உறுதியேற்று ரோஜா பூக்களை கொடுத்து இந்த மரியாதையை செலுத்தியாக கூறியுள்ளனர். அங்கு வந்து செல்லும் மக்கள் மற்றும் பாதசாரிகளிடம் சுமார் 3000 ரோஜா பூக்களை வழங்கி தங்களது ஆதரவையும், மரியாதையையும் செலுத்தினர். பூக்களை வாங்கிக்கொண்ட லண்டன் மக்கள் உணர்ச்சிவயப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த நிகழ்வின் மூலம் லண்டன் நகரம் ஒற்றுமையுடன் இருப்பது புரிவதாகவும் கூறியுள்ளனர்.

இதற்கு பொதுமக்கள் அனைவரும் பெரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்கள் சேர்ந்து இவ்வாறு அஞ்சலி செலுத்தியது மக்கள் ஒற்றுமையுடன் இருப்பதை காட்டுவதாகவும் பிரிட்டன் மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல் இஸ்லாமிய மக்கள் தீவிரவாதத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளனர். இஸ்லாமியர்களின் இந்த செயல்பாடு எல்லோரும் பயங்கரவாதிகள் இல்லை என்பதை காட்டுவதாகவும் பிரிட்டன் மக்கள் கூறியுள்ளனர்.

லண்டனில் சமீபமாக தொடர்ந்து தாக்குதல்கள் நடைபெற்று வருகிறது. மான்செஸ்டர் இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டனர். லண்டன் பிரிட்ஜ் தாக்குதலில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

அடுத்த செய்தி