ஆப்நகரம்

தூய்மை பணியாளருக்கு ரூ.18.50 லட்சம் சம்பளம்: அடேங்கப்பா...!

இங்கிலாந்து ராணியின் அரண்மனையில் தூய்மை பணியாளர் வேலைக்கு ரூ.18.50 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Samayam Tamil 29 Oct 2020, 4:24 pm
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு வின்ட்சர் கேஸ்ட்டில் என்ற அரண்மனை உள்ளது. அரச குடும்பத்துக்கு சொந்தமான இந்த வின்ட்சர் அரண்மனையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக ஆட்கள் தேர்வு செய்யும் பணி நடைபெறுகிறது. இதற்கான விளம்பரம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil வின்ட்சர் கேஸ்ட்டில்
வின்ட்சர் கேஸ்ட்டில்


அதில், இந்த பணியில் சேரும் நபர்களுக்கு குறைந்தபட்ச சம்பளமாக இந்திய மதிப்பில் ரூ.18.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு 13 மாதங்கள் பயிற்சியளிக்கப்படும் அதன்பின்னர், அவர் முழுநேரமாக பணியில் அமர்த்தப்படுவார்.

பணிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு அரண்மனையில் தங்குமிடமும், உணவும் வழங்கப்படும். பயண செலவையும் அரண்மனையே ஏற்றுக்கொள்ளும். வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் டிகிரி படித்திருக்க வேண்டும். இருப்பினும், வெற்றிகரமான தேர்வர்களுக்கு தேவையான தகுதிகள் இல்லையென்றால், அரச திட்டத்தின் ஒரு பகுதியாக அவற்றைப் பெற ஆதரவு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூச்சிக்கு இவ்வளவு மவுசா? பல கோடிகள் லாபம்!

அரண்மனையை தூய்மைப் படுத்துவது, உள்அலங்காரப் பொருட்களை பராமரிப்பது போன்றவை செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த விளம்பரத்தில், பணிக்கு தேர்வாகும் நபர், ஒரு வருடத்துக்கு பக்கிங்ஹம் அரண்மனை உள்ளிட்ட அரச குடும்பத்தின் வீட்டில் பணி புரிய வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை. இரண்டு நாட்கள் விடுப்பு. இது தவிர 33 நாட்கள் விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி