ஆப்நகரம்

எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர் சுட்டுக்கொலை

எல்லை தாண்டிய தாக்குதலில் இந்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் குர்னம் சிங் பரிதாபமாக உயிரிழந்தார்.

TNN 23 Oct 2016, 5:51 am
பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த எல்லை தாண்டிய தாக்குதலில் இந்திய பாதுகாப்பு படை வீரர் குர்ணம் சிங் பலத்த காயமடைந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரை மற்ற மாநிலத்தில் உள்ள நல்லதொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது சகோதரி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
Samayam Tamil bsf jawan gurnam singh injured in cross border firing by pakistan passes away
எல்லை தாண்டிய துப்பாக்கிச்சூட்டில் பாதுகாப்பு படை வீரர் சுட்டுக்கொலை


கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரிக்கு உள்பட்ட போபியா பகுதியில் நேற்று நடந்த பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த அத்துமீறிய தாக்குதலுக்கு இந்த இராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதில் 7 ராணுவ வீரர்கள் மற்றும் ஒரு தீவிரவாதி ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கு குர்ணம் சிங்கும் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிந்த குர்ணம் சிங் பரிதாபமாக உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Border Security Force (BSF) jawan Gurnam Singh, who was injured in cross-border firing by Pakistan, has succumbed to his injuries. Gurnam Singh was declared dead on Saturday night

அடுத்த செய்தி