ஆப்நகரம்

பிரிட்டன் பக்கிங்ஹாம் அரண்மனை தடுப்பு சுவர் மீது ஏற முயன்றவர் கைது!

பிரிட்டன் பக்கிங்ஹாம் அரண்மனை பாதுகாப்பு சுவர் மீது ஏற முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

TNN & Agencies 12 Dec 2017, 6:08 am
லண்டன்: பிரிட்டன் பக்கிங்ஹாம் அரண்மனை பாதுகாப்பு சுவர் மீது ஏற முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil buckingham palace arrest man held trying to climb wall
பிரிட்டன் பக்கிங்ஹாம் அரண்மனை தடுப்பு சுவர் மீது ஏற முயன்றவர் கைது!


இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் அதிகாரப்பூர்வ அரண்மனை, பக்கிங்ஹாம் அரண்மனை. இந்த அரண்மனை உச்சக்கட்ட பாதுகாப்பு மிகுந்தது.

இந்நிலையில், 24 வயது வாலிபர், ஒருவர் பக்கிங்ஹாம் அரண்மனையின் உயரம் குறைவான பாதுகாப்பு வேலியை தாண்டி சுவர் மீது ஏற முயற்சித்தார். அரண்மனைக்குள் குதிப்பதற்கு முன்பாக போலீசார் அவரை பார்த்து விட்டனர்.

உடனடியாக அவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் வெளியிடப்படவில்லை. பின் அவர் மத்திய லண்டன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டது.

கைது செய்யப்பட்ட நபர் எந்த வித ஆபத்தான ஆயுதங்கள் இல்லாத காரணத்தினாலும், அவர் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் இல்லை என உறுதி செய்த பின் நிபந்தனை ஜாமீனில் அவர் விடுவிக்கப்பட்டார்.

கடந்த அக்டோபர் மாதம், பக்கிங்ஹாம் அரண்மனைக்குள் நுழைய முயன்ற 30 வயது பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

A 24-year-old man has been arrested on suspicion of trespass at Buckingham Palace.

அடுத்த செய்தி