ஆப்நகரம்

2030-களில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 90 வயது...!

2030களில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 90 வயதை எட்டக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

TOI Contributor 23 Feb 2017, 11:51 am
2030களில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 90 வயதை எட்டக்கூடும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
Samayam Tamil by 2030 average life expectancy may touch 90
2030-களில் பெண்களின் சராசரி ஆயுட்காலம் 90 வயது...!


லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த குழுவினர் இந்த ஆய்வை நடத்தி கணிப்பை வெளியிட்டுள்ளனர். தற்போது வளர்ந்து வரும் நவீன மருத்துவ உலகில் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், 2030-களில் தென் கொரிய நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் அதிகமாக இருக்கும் என்றும், அமெரிக்க பெண்களின் சராசரி ஆயுட்காலம் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சராசரி ஆயுட்காலம் தொடர்பாக 35க்கும் மேற்பட்ட வளர்ந்த நாடுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஆண்களை விட பெண்களே அதிக சராசரி ஆயுளுடன் வாழ்ந்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். அவர்களது முழு ஆய்வுக் கணிப்பு லான்செட் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தென்கொரியா, பிரான்ஸ், ஜப்பான், ஸ்பெயின் நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் 88 வயதை எட்டக்கூடும் என்றும், ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து நாட்டு பெண்களின் சராசரி ஆயுட்காலம் 84ஆக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளர்ந்த நாடுகளான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், அங்குள்ள பெண்களின் சராசரி ஆயுட்காலம் குறைந்து வருவதாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி