ஆப்நகரம்

தமிழீழ போராட்டம்: உயிர் மாய்த்தவர்களுக்கு கனடா பிரதமர் இரங்கல்!!

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்போது இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் 35வது ஆண்டை நினைவு கூறும் வகையில் கனடா வாழ் தமிழர்களுடன் இணைந்து அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் அறிக்கை வெளியிடடுள்ளார்.

Samayam Tamil 24 Jul 2018, 4:49 pm
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்போது இலங்கையில் கொல்லப்பட்ட தமிழர்களின் 35வது ஆண்டை நினைவு கூறும் வகையில் கனடா வாழ் தமிழர்களுடன் இணைந்து அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இரங்கல் அறிக்கை வெளியிடடுள்ளார்.
Samayam Tamil பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ


இலங்கையில் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அந்த நாடு கொடூரமான தாக்குதல்கள் நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் விடுதலைக்காக போராடிய தமிழர்கள் மீது போர் தொடுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டு, இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நாளை கனடா வாழ் மற்றும் உலகம் வாழ் தமிழர்களுடன் இணைந்து நினைவு கூறுகிறேன். இந்த ஜூலை மாதத்தில் தான் பெரிய அளவில் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த மாதத்தை கருப்பு ஜூலையாக அனுஷ்டிக்கிறோம்.

35 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாதத்தில் துவங்கிய போர்தான் இறுதியில் லட்சக்கணக்கான தமிழர்களை பலி வாங்கியது. 2009ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்தது. 1983ஆம் ஆண்டில் இலங்கையை விட்டு வெளியேறிய தமிழர்கள் சுமார் 1800 பேர் கனடாவில் குடியேறி நாட்டுக்காக உழைத்தனர். இன்று நாங்கள் இந்த நிலைமைக்கு இருக்கிறோம் என்றால் அதற்கு அவர்கள்தான் காரணம்.

கருப்பு ஜூலையில் பலியாகி, தனது சொந்த பந்தங்களை இழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை, வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர் வரும் காலத்தில் அனைத்து வளங்களையும் பெறுவதற்கு உழைப்போம், அமைதியை பெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி