ஆப்நகரம்

சந்திர கிரகணம் மனிதர்களை பாதிக்குமா ?

21ஆம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் இன்று நிகழ இருப்பதால், அதை பார்ப்பவர்களுக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

Samayam Tamil 27 Jul 2018, 12:42 pm
21ஆம் நூற்றாண்டின் மிக நீளமான சந்திர கிரகணம் இன்று நிகழ இருப்பதால், அதை பார்ப்பவர்களுக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படுமா என்பது குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
Samayam Tamil vm05d24_chandra-grahan-lunar-eclipse_625x300_26_July_18


21ஆம் நூற்றாண்டின் மிக நீளமான நீளாமன சந்திர கிரகணம்இரவு 11.45 மணிக்கு தொடங்க உள்ளது. 11.45மணியிருந்து காலை 4.15 வரை இந்த சந்திர கிரகணம் நீடிக்கும்.இரவு12.15மணியிருந்து இதை நம் வெறும் கண்களால் பார்க்க முடியும்.

ஆனால் சந்திரகிரகணத்தை பார்த்தால் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்று ஆன்மிக நம்பிக்கை உண்டு. கிரகண காலங்களில் எல்லா கோவில்களும் நடை சாத்தப்படும். மேலும்கர்ப்பிணி பெண்கள் சந்திர கிரணகனத்தைபார்ப்பது உடல்நல சிக்கலை ஏற்படுத்தும் என்றும், சாத்தனின் குழந்தைபிறக்க வாய்புள்ளதாகவும் கருதப்படுகிறது. ஆனால் விஞ்ஞானத்தின் படி இது வெறும் கட்டுகதைகளே.

சந்திர கிரகணத்தை பார்ப்பதால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்து எந்த ஆராய்சிகளும் விஞ்ஞானத்தில் செய்யப்படவில்லை . ஆனால் சந்திர கிரணகனத்தால் சில மனிதர்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்புகள் இருக்காலம் என்று கூறப்பட்டுள்ளது.

சூரியனின் ஒலியை பூமியின் நிழல் மறைப்பதால்,. சந்திரன்சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது. இதனால் சந்திர கிரகணத்தை பார்ப்பவர்களுக்கு தூக்கமின்மை ஏற்படலாம். மேலும் சிறுது அழுத்தமாக உணரலாம். மேலும் ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பு உண்டு.

அமெரிக்காவில், சந்திர கிரகணத்தால் விலங்குகள் மீதுஏற்படும் மாற்றம் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதில் பூச்சிகளுக்கு, ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என்றும் மீன்களின் இனப்பெருக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகிறது.

அடுத்த செய்தி